- Home
- Tamil Nadu News
- திமுகவுடன் கூட்டணி உறுதியான கையோடு.. மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
திமுகவுடன் கூட்டணி உறுதியான கையோடு.. மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
Rajya Sabha Elections: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை எப்படியாவது இரண்டாவது முறையாக திமுக ஆட்சியை பிடித்து வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும் என நோக்கில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
இதில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மற்றும் நீண்ட இழுபறிகளுக்கு இடையே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தில் முயற்சியால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் திமுக கூட்டணியை உறுதி செய்த கையோடு காங்கிரஸ் மாநிலங்களவை தேர்தலுக்கான தமிழகத்தில் இருந்து கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவித்துள்ளார். இவர் யார் என்பதை விரிவாக பார்ப்போம்.
யார் இந்த கிறிஸ்டோபர் திலக்
திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக். இவர் கட்சியின் அடிமட்டத் தொண்டராகத் தொடங்கி இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். மணிப்பூர் போன்ற பதற்றமான சூழல் நிலவும் மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதிலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்களிப்பு ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் பாராட்டை பெற்றவர். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6 மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல்
திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டைன் ரவீந்திரன், தேமுதிக சார்பாக சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், போட்டியிட உள்ளனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியி உள்ளனர்.

