MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வுடன் சலுகை.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வுடன் சலுகை.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் சலுகைகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Mar 05 2026, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டாஸ்மாக் கடைகள்
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை
Image Credit : our own

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை

அதாவது 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட இருந்தனர்.

35
தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
Image Credit : our own

தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பள உயர்வும், சில சலுகைகளும் அறிவித்து தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (TASMAC) பணிபுரியும் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திற்கு வைத்ததின் பேரில் அவர்களுடைய கோரிக்கைகளை பரீசிலனை செய்து கீழ்க்கண்டவாறு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

45
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
Image Credit : our own

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

டாஸ்மாக் கடைப்பணியாளர்கள் ஏற்கனவே பெறும் ஊதியத்தோடு தற்போது கூடுதலாக ரூ.1000/- உயர்த்தி வழங்கப்படுகிறது. இது ஏப்ரல் 01.04.2026 முதல் அமுலுக்கு வரும். இதன் மூலம் 24,033 கடைப்பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

கடைப்பணியாளர்களுக்கு ESI மருத்துவ மற்றும் சமூகப்பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலிபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அவுட்சோர்சிங் (Out Sourcing முறையிலோ அல்லது காலிபாட்டில்களை சேகரிப்பு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவோ செயல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

55
மீண்டும் பணி வழங்கப்படும்
Image Credit : our own

மீண்டும் பணி வழங்கப்படும்

கிடங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் கடைப்பணி ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக பணிநீக்கம் கடைப்பணியாளர்களுக்கு உள்ள செய்யப்பட்டு வெளியில் குற்றச்சாட்டுகள் தன்மைக்கேற்ப மீண்டும் பணிவழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் (டாஸ்மாக்), பொது மேலாளர் (சில்லறை விநியோகம்), பொது மேலாளர் (நிர்வாகம்), துணைப் பொது மேலாளர் மற்றும் சட்டஅலுவலர் (டாஸ்மாக்) ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை துறைக்கு சமர்ப்பிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டாஸ்மாக் கடை
டாஸ்மாக்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர் – தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்!
Recommended image2
TNEB : மின்தடையை இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்! 24 மணி நேரமும் சேவை!
Recommended image3
PMFME Scheme: சொந்தமாக ஊறுகாய், மசாலா பிசினஸ் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் மானியம் வழங்கும் மத்திய அரசு; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
Related Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. எப்போது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved