- Home
- Tamil Nadu News
- நான் செய்த ஒற்றை செயல்! நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு - மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்
நான் செய்த ஒற்றை செயல்! நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு - மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்
உடல் உறுப்புகளை தானம் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்திருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தீக்கும், மண்ணுக்கும் இரையாகாமல்...
உடல் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக மாறியுள்ள நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டா்லின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு!
உடல் உறுப்புகளை தானம் செய்த ஸ்டாலின்
அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.
தமிழ் நாடு முதல் இடம்
2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்!
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு! என்று குறிப்பிட்டு தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி உள்ளார்.