சென்னையை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் 9 வயது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக பயணிகள் ஓட்டுநரை தாக்கி, பின்னர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போலீசில் புகார் அளித்தனர்.
சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்தில் பயணித்த ஓட்டுநர் ஒருவர் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து வந்தக்கொண்டிருந்தது.
ஆபாசமாக படம் எடுத்த ஓட்டுநர்
பேருந்து சேலம் அருகே உள்ள தலைவாசல் பகுதியில் பேருந்து வந்தபோது ஓட்டுநராக இருந்த ஞானவேல் என்பவர், நடத்துனரின் இருக்கை பின்புறம் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியின் உள்ளாடையை நீக்கி, தனது மொபைலில் புகைப்படம் எடுத்ததாக தெரியவந்தது. இந்த செயலைக் கவனித்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஞானவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்ல அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
இதனையடுத்து பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும் சிறுமியின் பெற்றோர் மற்றும் பயணிகள் இணைந்து புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் பேருந்தை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஞானவேல் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓடும் பேருந்தில் ஓட்டுநர் செய்த கேவலமாக செயல் சக பயணிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
