இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

01:47 PM (IST) Jan 29
சென்னையில் மூன்று நாள் "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" பயிற்சியை வழங்குகிறது. பிப்ரவரி 4 முதல் 6, 2026 வரை நடைபெறும் இப்பயிற்சியில், ChatGPT, Glide போன்ற No-Code கருவிகளைக் கொண்டு AI செயலிகளை உருவாக்கக் கற்றுத்தரப்படும்.
11:22 AM (IST) Jan 29
தனுஷ் பட நடிகை அமைரா தஸ்தூர் சுடிதாரில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
10:44 AM (IST) Jan 29
Sani Peyarchi Palangal 2026: சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இதனால் தனுசு, கும்பம், மீனம் ராசியினருக்கு அதிர்ஷ்டமும், திடீர் பண வரவும் உண்டாகும். அதுகுறித்து இங்கு காணலாம்.
11:57 PM (IST) Jan 28
Rahu Mercury Conjunction Predictions in Tamil : முக்கிய கிரகங்களான ராகு மற்றும் புதன் இணைவு இந்த ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
11:03 PM (IST) Jan 28
Kannampalayam Sri Palaniandavar Temple History : கோவை பழனி என்று அழைக்கப்படும் கோவை கண்ணம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோயில் பற்றி பார்க்கலாம்.
10:35 PM (IST) Jan 28
கோயம்புத்தூர் பழனியாண்டவர் கோயிலில் முருகப் பெருமான் வள்ளியை மணம் முடிப்பதற்காக கிழவர் வேடம் பூண்ட சுவாரசியமான தல வரலாறு மற்றும் சிறப்புகளை பார்க்கலாம்.
10:15 PM (IST) Jan 28
விரைவில் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படும் என்று கணித்த செங்கோட்டையன், அடுத்த சில மாதங்களில், அதிகாரிகள்கூட தவெக-வின் வளர்ந்து வரும் செல்வாக்கை அங்கீகரிப்பார்கள் என்றார்.
09:57 PM (IST) Jan 28
ஜி.கே. மணியும், சேலம் அருளும் தவெக நிர்வாகிகளுடன் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் இரண்டு நாட்களாக ராமதாஸ் தரப்பு விஜய புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
09:56 PM (IST) Jan 28
இந்திய அணியிடம் சரியான அளவில் சுழற்பந்துவீச்சுத் திறமை இருப்பதாகவும், அணிக்கு சரியான சமநிலையையும், வீரர்களுக்கு சரியான இடங்களையும் வழங்குவது பட்டத்தை தக்கவைக்க உதவும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார்.
09:37 PM (IST) Jan 28
Thiruparankundram Teppam Thiruvizha 2026 : மதுரையில் தெப்பத்திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில் தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
09:31 PM (IST) Jan 28
பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிரான போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் அனுமதிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
08:51 PM (IST) Jan 28
துரோகங்களுக்கான அர்த்தமாக அகராதிகளில் இடம்பிடித்திருக்கும், பத்து தோல்வி பழனிசாமி முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
08:38 PM (IST) Jan 28
Mannarkovil Temple Three tiered Vishnu Rajagopala Swamy : ஒரே கோபுரத்தின் கீழ் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் திருநெல்வேலி மன்னார்கோவில் அதிசயத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:15 PM (IST) Jan 28
ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது "வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
07:46 PM (IST) Jan 28
நிலக்கடலை விலை கடுமையாக உயர்ந்ததால், கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 40% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மூலப்பொருள் தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07:42 PM (IST) Jan 28
Rajagopala Swamy temple girl to boy miracle : மன்னார்குடியில் இருப்பதைப் போலவே இங்கும் பெருமாள் மிக அழகாக இருப்பதால் இவருக்கு "அழகிய மன்னார்" என்று பெயர் வந்தது.
07:32 PM (IST) Jan 28
தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
07:16 PM (IST) Jan 28
Mannar Rajagopala Swamy Palayamkottai in Tamil : திருநெல்வேலி சீமையின் அதிசயம், இராஜகோபால சுவாமி கோயிலின் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:11 PM (IST) Jan 28
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெள்ளை சேலையில் இருக்கும் அழகிய போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.
07:05 PM (IST) Jan 28
பாகிஸ்தானின் தரவரிசை சரிவதற்கு அதன் பலவீனமான பொருளாதாரம் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
07:02 PM (IST) Jan 28
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
06:56 PM (IST) Jan 28
Alagiya Mannar Rajagopala Swamy Temple History in Tamil : திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:24 PM (IST) Jan 28
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி தடகளம் வில்வித்தை சைக்கிளிங் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும், வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் காசோலைகள்.
06:18 PM (IST) Jan 28
Google கூகுள் போட்டோஸில் ஜெமினி AI மூலம் வாய்ஸ் கமெண்ட் கொடுத்து போட்டோ எடிட் செய்யும் வசதி அறிமுகம். தமிழ் மொழியிலும் இது செயல்படும்.
06:18 PM (IST) Jan 28
இந்த மண்ணில் ஏற்கனவே போதுமான அளவு குருதி சிந்தப்பட்டுவிட்டது. இப்போது, நம் மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தக் கூட்டத்தில் நாம் விவாதிக்கும் மற்ற பல விசயங்களை விட இது மிக அவசரமானது.
06:11 PM (IST) Jan 28
Android ஆண்ட்ராய்டு 17-ல் ஆப்பிள் ஐபோன் போன்ற புதிய ‘ப்ளர்’ எஃபெக்ட் அறிமுகமாகவுள்ளது. இது வால்யூம் மற்றும் பவர் மெனுவில் ஊடுருவும் டிசைனை கொண்டுவரும்.
06:04 PM (IST) Jan 28
நாடோடிகள் பட நடிகை அனன்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
06:04 PM (IST) Jan 28
Telecom மத்திய பட்ஜெட் 2026-ல் உரிமக் கட்டணத்தை 1% ஆகக் குறைக்கவும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்கவும் டெலிகாம் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பட்ஜெட் 2026-ல் வெளியாகும் அதிரடி அறிவிப்பு!
05:51 PM (IST) Jan 28
Meta குழந்தைகளை அடிமையாக்குவதாக மெட்டா, டிக்டாக், யூடியூப் மீது தொடரப்பட்ட வழக்கு அமெரிக்காவில் விசாரணைக்கு வந்தது. இது சமூக ஊடக உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
05:48 PM (IST) Jan 28
அஜித் பவார், மாநில அரசியலில் ஒரு தடத்தை வலுவாக பதித்தவர். அவர் அரசியலின் தாதாவாக உருவெடுத்தது மட்டுமல்லாமல், பாராமதியில் அவர் காலமானார் என்பது ஒரு சோகமான தற்செயல் நிகழ்வு.
05:41 PM (IST) Jan 28
Swiggy ஸ்விக்கி இப்போது ChatGPT, Claude மற்றும் Gemini மூலம் நேரடியாக உணவு மற்றும் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும் புதிய AI வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
05:32 PM (IST) Jan 28
. ஒருமுறை சுற்றி வந்த பிறகு, விமானம் மீண்டும் தரையிறங்க வந்தது. அப்போது ஓடுபாதை தரையிறங்குவதற்குத் தெரிகிறதா என்று விமானியிடம் மீண்டும் கேட்கப்பட்டது. அப்போது, விமானி ஓடுபாதை தெரிவதை உறுதி செய்தார்.
05:31 PM (IST) Jan 28
Google AI கூகுள் தனது தேடுபொறியில் ஜெமினி 3 மாடலை இணைத்து, AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோடை மேம்படுத்தியுள்ளது. இனி தேடல் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
05:25 PM (IST) Jan 28
Amazon அமேசான் தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலால் 16,000 பேரின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. AWS மற்றும் பிற துறைகளில் பணிநீக்கம் இருக்கலாம். தவறுதலாக லீக் ஆன இமெயில் - 16,000 பேர் கதி என்ன?
05:20 PM (IST) Jan 28
AI AI தொழில்நுட்பம் பழைய வேலைகளை மாற்றினாலும், வேளாண்மை மற்றும் நிதித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் தெரிவித்துள்ளார்.
04:48 PM (IST) Jan 28
நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
04:38 PM (IST) Jan 28
விஜயகாந்த் என்கிற ஒற்றை முகத்துக்காகத்தான் தேமுதிகவில் இருக்கிறோம். அதை பகடைக்காயாக்கி நாலாபுறமும் பேரம்பேசி கட்சியின் பெயரையும், நம்பகத்தன்மையையும் சிதைக்கிறார் பிரேமலதா.
04:36 PM (IST) Jan 28
திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
03:47 PM (IST) Jan 28
நடிகை மிருணாள் தாக்கூர் அண்மையில் காதல் கிசுகிசுவில் சிக்கிய நிலையில், அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள படம் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.
03:34 PM (IST) Jan 28
நடிகை தேஜு அஸ்வினி ஜீன்ஸில் டக்கராக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.