கோவை கண்ணம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோயில் – கோவை பழனி கோயில் வரலாறு!
Kannampalayam Sri Palaniandavar Temple History : கோவை பழனி என்று அழைக்கப்படும் கோவை கண்ணம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோயில் பற்றி பார்க்கலாம்.

Coimbatore Palaniandavar Temple History, கோவை கண்ணம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோயில்
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கோயில் தான் ஸ்ரீ பழனி ஆண்டவர் கோயில். கோவை பழனி என்றும் இந்தக் கோயில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் போன்று நிறைய படிக்கட்டுகள் இல்லை என்றாலும் கூட 27 படிக்கட்டுகள் கொண்டதாக இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 27 படிக்கட்டுகளை கடந்து சென்றால் முதலில் நர்த்தன விநாயகர் காட்சியளிக்கிறார். இதையடுத்து கொடிமரம், அதன் பிறகு யாளி, குதிரை அமைப்புகள் உள்ளன. இதையடுத்து உள்ளே சென்றால் மூலவர் பழனியாண்டவர் காட்சியளிக்கிறார். முன்னதாக சிறிய கோயிலாக இருந்த இந்தக் கோயிலானது ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 4 நிலை கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முதியவர் வேடத்தில் வரலாறு:
முருகப்பெருமானின் அதிக பக்தி கொண்ட குறவன் குறத்தி இனத்தை சார்ந்த வள்ளி பக்திக்கு மேல் காதலில் விழுந்தார். வள்ளியை மணம் முடிக்க சிறுசிறு திருவிளையாடல்களை நடத்தினால் முருகப்பெருமான் அப்படி நடக்கும் பொழுது முதலில் வேடன் உருவத்தில் வந்து விளையாட்டுகளை நடத்திவிட்டு பிறகு முதியவர் வேடத்தில் வந்தார் முருகப்பெருமான். மிகவும் பசியாக இருப்பதாக கூறிய அவர், சாப்பிட ஏதாவது தருமாறு வள்ளியிடம் கேட்டார். இரக்கம் கொண்ட வள்ளி, தினைமாவும், தேனும் கலந்து முதியவருக்கு கொடுத்தாள். அதனை உண்டு முடித்தவர், ‘தாகமாக உள்ளது தண்ணீர் பருக வேண்டும்’ என்றார். அவரை அங்கிருந்த சுனைஒன்றுக்கு அழைத்துச் சென்று நீர் பருக வைத்தாள்.
உன்னால் என்னுடைய பசியும் தாகமும் தீர்ந்து விட்டது. ஆனால் இப்போது காதல் மோகம் தலைதூக்கி விட்டது. என்னை நீ மனம் புரிந்து கொண்டால் உன்னை நான் உலகம் போற்றும் துதிக்கும் வகையில் உயர்த்து வேன்’ என்றார் முதியவர் வேடத்தில் வந்திருக்கும் முருகப்பெருமான். இந்த வார்த்தையைக் கேட்டதும் கோபத்தில் கொந்தளித்தாள் வள்ளி. ‘இந்த தள்ளாத நிலையில், தவம் புரிய வேண்டிய வயதில், இது போன்று பேசுவது உங்களைப் போன்றவர்களுக் அழகல்ல. தாங்கள் பேசியது எம் குலத்தவர்கள் யாருக்காவது தெரிந்தால், உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
கோவை பழனியாண்டவர் கோவில் சிறப்பு
நான் மேலும் சினம் அடையும் முன்பாக இங்கிருந்து சென்று விடுங்கள்’ என்று கூறிவிட்டு திணைவயல் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றாள்எப்படியும் வள்ளியை திருமணம் செய்ய வேண்டும். அதற்காக தன் அண்ணனான ஆனைமுகனிடம் வேண்டி, அவரது உதவியை நாடினார் முருகப்பெருமான். தம்பியின் காதலுக்காகஆனைமுகன், யானையாக மாறி வள்ளியை நோக்கி ஓடி வந்தார்.
யானையைப் பார்த்ததும் அஞ்சி நடுங்கிய வள்ளி, முதியவரை நோக்கி ஓடிப்போய், ‘யானையிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறி அவரது நெஞ்சில் கண்களை மூடி தஞ்சம் அடைந்தாள்.அதைப் பார்த்ததும் யானை அங் கிருந்து அகன்று காட்டிற்குள் ஓடி மறைந்தது. வள்ளி கண் விழித்து பார்த்தபோது, முதிர்ந்த தோற்றத்தை நீக்கி ஆறுமுகப்பெருமானாக முருகப்பெருமான் ஈன்றிருந்தார் அதனை கண்ட வள்ளி ஆச்சரியமடைந்து எனக்காக நீங்கள் முதியவர் வேடம் அணிந்து நடிக்கிறீர்களா என்று கேட்டு முருகப்பெருமானை மணந்து கொண்டார். இத்தகைய வேடம் மிகவும் சிறப்பு பெற்றதாகவும் கூறப்படுகிறது இதனை போற்றும் விதமாக பழனி மலை சுவாமி தண்டாயுதபாணி திருக்கோயிலில் இத்தகைய கிழவர் வேடம் அணிந்து அருள் பாலிக்கின்றார் முருகப்பெருமான்.
பலன்கள்:
முருகன் பழனி மலை முருகன் கோயிலில் ஒவ்வொரு சமயத்திற்கு ஒவ்வொரு வேடமணிந்து காட்சி தருவதாக கூறப்படுகின்றது. முதியவர் வேடம் அணிந்து காட்சி தரும் வேளையில் நம் முருகனை தரிசித்தால் நம் குடும்பத்தில் பிரச்சனை கஷ்டங்கள் நீங்கி விரைவில் வாழ்க்கை மேன்மைப்படும் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவி பிரச்சினைகளுக்கிடையே ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுபடும் என்றும் காதல் புரிதல் தன்மை ஏற்படும் என்று கூறப்படுகிறது.