- Home
- Astrology
- கும்பத்தில் ராகு புதன் சேர்க்கை ; அடிச்சு தூள் கிளப்பும் டாப் 3 ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?
கும்பத்தில் ராகு புதன் சேர்க்கை ; அடிச்சு தூள் கிளப்பும் டாப் 3 ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?
Rahu Mercury Conjunction Predictions in Tamil : முக்கிய கிரகங்களான ராகு மற்றும் புதன் இணைவு இந்த ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

ராகு-புதன் பெயர்ச்சி
Rahu Mercury Conjunction Predictions in Tamil : கும்ப ராசியில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ இருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் ராகு மற்றும் புதனின் சேர்க்கை நிகழும் நிலையில் இது 3 ராசிகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த 3 ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசி அன்பர்களே கர்ம ஸ்தானத்தில் முக்கிய கிரகங்களான ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் இந்த சேர்க்கை நிகழும் நிலையில் ரிஷப ராசிக்கு தொழில் மற்றும் வியாபரத்தில் சீரான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பண வரவிற்கு தடைகள் இருக்காது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் உருவாகும்.
மேஷ ராசி...
ராகு மற்றும் புதன் சேர்க்கையானது மேஷ ராசியினருக்கு எல்லா வகையிலும் நன்மைகளை கொண்டு வந்து தரப் போகிறது. தங்கம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தங்க நகை வாங்கும் யோகம் தேடி வரும். அதற்கேற்ப பண வரவும் இருக்கும். மகன் மற்றும் மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலை தேடுவோருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
கும்ப ராசி..
கும்ப ராசியிலேயே ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழும் நிலையில் பல வழிகளிலில் நன்மை உண்டாகும். வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படக் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும், தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும்.