இது புதுசா இருக்கே! சும்மா பேசினாலே சோறு வரும்.. ஸ்விக்கியின் வேற லெவல் டெக்னாலஜி..
Swiggy ஸ்விக்கி இப்போது ChatGPT, Claude மற்றும் Gemini மூலம் நேரடியாக உணவு மற்றும் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும் புதிய AI வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Swiggy
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பயனர்கள் ஸ்விக்கி செயலியைத் திறக்காமலே, ChatGPT, Claude மற்றும் Google Gemini போன்ற AI செயலிகள் மூலமாகவே உணவு மற்றும் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்ய முடியும். இந்த புதிய வசதி பயனர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, எளிமையான ஷாப்பிங் அனுபவத்தையும் வழங்கும்.
மாடல் கான்டெக்ஸ்ட் புரோட்டோகால் (MCP)
ஸ்விக்கி நிறுவனம் 'மாடல் கான்டெக்ஸ்ட் புரோட்டோகால்' (Model Context Protocol - MCP) என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகின் முதல் குவிக்-காமர்ஸ் (Quick-commerce) தளமாக மாறியுள்ளது. இதன் மூலம், சுமார் 40,000-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாமார்ட் (Instamart) பொருட்களை வெறும் குறுஞ்செய்தி மூலமாகவே தேடி ஆர்டர் செய்ய முடியும். செயலியில் தேடுவதற்குப் பதிலாக, "இன்றைய பார்ட்டிக்கு தேவையான ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்" என்று டைப் செய்தால் போதும், AI தானே பட்டியலைத் தயார் செய்துவிடும்.
எப்படி செயல்படுகிறது?
இந்த MCP தொழில்நுட்பம், AI கருவிகளை ஸ்விக்கியின் சர்வர்களுடன் பாதுகாப்பாக இணைக்கிறது. இதன் மூலம் உணவகங்களைத் தேடுவது, விலையை ஒப்பிடுவது, பொருட்களைத் தேர்வு செய்வது, பில் கட்டுவது மற்றும் டெலிவரியை டிராக் செய்வது என அனைத்தையும் ஒரே சாட்டில் (Chat) முடித்துவிடலாம். தினசரி திட்டமிடலுக்கும், ஷாப்பிங்கிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் என்று ஸ்விக்கி நம்புகிறது.
எதிர்காலத் திட்டங்கள்
ஸ்விக்கியின் சிடிஓ (CTO) மதுசூதன் ராவ் கூறுகையில், "இது இந்திய வர்த்தக முறையில் ஒரு கேம் சேஞ்சராக (Game Changer) இருக்கும்" என்றார். எதிர்காலத்தில் AI உதவியுடன் உணவுத் திட்டமிடல் (Meal Planning), ஆரோக்கியமான டயட் பரிந்துரைகள் மற்றும் பார்ட்டி ஏற்பாடுகளைச் செய்யவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும். பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்துவது எப்படி?
இந்த வசதியைப் பெற, பயனர்கள் தங்கள் விருப்பமான AI செயலியில் (உதாரணமாக ChatGPT) செட்டிங்ஸ் (Settings) சென்று, 'Connectors' பகுதியில் ஸ்விக்கி MCP URL-ஐ இணைக்க வேண்டும். உணவு ஆர்டர் செய்வது (Food), மளிகை பொருட்கள் (Instamart) மற்றும் உணவக முன்பதிவு (Dineout) என அனைத்திற்கும் தனித்தனி இணைப்புகள் உள்ளன. இதை ஒருமுறை செட் செய்துவிட்டால், அதன்பின் எளிதாகப் பேசிக்கொண்டே ஆர்டர் செய்யலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

