ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கை, இந்தியர்களின் வினோதமான ஆன்லைன் ஷாப்பிங் பழக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் ₹1 லட்சத்திற்கு மேல் காண்டம்களை ஆர்டர் செய்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் எப்படியெல்லாம் பொருட்களை வாங்கியுள்ளனர் என்ற அதிரடி ரிப்போர்ட்டை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) வெளியிட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் செய்துள்ள ஆர்டர் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது.
சென்னையின் 'காண்டம்' சாதனை!
சென்னையைச் சேர்ந்த ஒரு பயனர் இந்த ஒரு வருடத்தில் மட்டும் ₹1,06,398 ரூபாய்க்கு காண்டம்களை ஆர்டர் செய்துள்ளார். இவர் மொத்தம் 228 முறை தனித்தனியாக ஆர்டர் செய்துள்ளாராம். அதாவது மாதம் சராசரியாக 19 ஆர்டர்கள்! இதைப்பார்த்து வியந்த ஸ்விக்கி நிர்வாகம், இது "முன்கூட்டியே திட்டமிடுதலின் உச்சம்" (Planning Ahead) என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், செப்டம்பர் மாதத்தில் மட்டும் காண்டம் விற்பனை 24% அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 127 ஆர்டர்களிலும் ஒரு காண்டம் பாக்கெட் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோடிகளில் புரளும் நகரங்கள்
காண்டம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பல வினோதமான ஆர்டர்கள் குவிந்துள்ளன.
• மும்பை: ஒரு பயனர் சர்க்கரை இல்லாத 'ரெட் புல்' (Red Bull Sugar Free) பானத்திற்காக மட்டும் ₹16.3 லட்சம் செலவு செய்துள்ளார்.
• சென்னை: செல்லப்பிராணிகளின் பொருட்களுக்காக (Pet Supplies) ஒரு நபர் ₹2.41 லட்சம் செலவழித்துள்ளார்.
• ஹைதராபாத்: ஒரே தட்டலில் 3 'ஐபோன் 17'களை (iPhone 17) ₹4.3 லட்சத்திற்கு ஒருவர் வாங்கியுள்ளார்.
• கொச்சி: 2025-ன் டாப் ஸ்பெண்டராக கொச்சியைச் சேர்ந்த நபர் ₹22 லட்சம் வரை செலவிட்டுள்ளார். இதில் 22 ஐபோன்கள் மற்றும் தங்க நாணயங்களும் அடங்கும்.
டிப்ஸ் வழங்குவதில் பெங்களூரு டாப்!
"தொழில்நுட்பத் தலைநகரம்" என அழைக்கப்படும் பெங்களூரு, தற்போது "டிப்ஸ் கொடுக்கும் தலைநகரம்" என்ற பெயரையும் பெற்றுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் டெலிவரி ஊழியர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ₹68,600 டிப்ஸ் கொடுத்து அசத்தியுள்ளார். சென்னைவாசி ஒருவர் ₹59,505 டிப்ஸ் கொடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.


