Rajagopala Swamy temple girl to boy miracle : மன்னார்குடியில் இருப்பதைப் போலவே இங்கும் பெருமாள் மிக அழகாக இருப்பதால் இவருக்கு "அழகிய மன்னார்" என்று பெயர் வந்தது.
பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றிய திருவிளையாடல்:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது அழகிய மன்னார் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில். விஷ்ணு பிரியன் என்னும் அர்ச்சகர் தனக்கு ஆண் வாரிசு தேவை என்று கேட்டபோது மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் பெருமாள் முகத்தில் தட்டை எடுத்து வீசிய ஆச்சு இன்னும் பதிந்திருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் கதை வரலாறு சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். முற்காலத்தில் இக்கோயிலில் விஷ்ணுப்ரியன் என்னும் அர்ச்சகர், பெருமாளுக்கு தினமும் பூஜை செய்யும் கைங்கரியத்தை செய்து வந்தார். திருமணமாகிவிட்ட விஷ்ணுப்ரியனுக்கு தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகளாகபவே பிறந்தன.
அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி: பக்தர்களைக் காக்கும் பாளையங்கோட்டை பெருமாள்!
இதனால் தனக்குப் பின்னர் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய ஓர் ஆண் குழந்தை இல்லையே என விஷ்ணுப்ரியன் வருத்தப்பட்டு கொண்டே இருந்தார். தனக்கு எப்படியாவது ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோபாலசுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார் அவ்வர்ச்சகர்.இந்நிலையில் அவரது மனைவி கலாவதி மீண்டும் கர்ப்பம்தரித்தாள். இந்தமுறை எப்படியும் பெருமாள் அருளால் நிச்சயம் தனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் விஷ்ணுப்பிரியன்.
திருநெல்வேலி சீமையின் அதிசயம்: இராஜகோபால சுவாமி கோயிலில் இத்தனை சிறப்புகளா?
இறுதியாக இம்முறையும் கலாவதி பெண் குழந்தையே பெற்றெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட விஷ்ணுப்ரியன், பெருமாள் மீது கையிலிருந்த ஆரத்தித் தட்டை வீசியெறிந்தார். அத்தட்டு பெருமாளின் மூக்கின் மீது பட்டதால் பெரிய தழும்பு ஏற்பட்டது. அதே கோபத்துடன் விஷ்ணுப்ரியன் வீட்டுக்கு சென்றுவிட, அங்கோ பிறந்த பெண் குழந்தை, ஆண் குழந்தையாக மாறியிருந்தது. அதைப் பார்த்து பதறிப்போன விஷ்ணுப்ரியன், கோயிலுக்கு சென்று, தனது செயலை எண்ணி வருந்தி பெருமாளின் கால்களில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டார் . இதன் காரணமாகத்தான் இந்த சுவாமிக்கு "பெண்ணை ஆணாக்கிய இராஜகோபாலன்" என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இன்றும் ராஜகோபாலர் திருமேனியில் மூக்கில் காயம்பட்ட பெரிய தழும்பை நாம் காணலாம். இந்தக் கோயிலின் சிறப்பே பெண்ணை ஆணாக மாற்றி பாமா ருக்மணி சமேதராக ஸ்ரீ ராஜகோபால சுவாமி காட்சியளித்தார். இதன் காரணமாக இத்தல இறைவன் பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார் என்று பெயர் பெற்றார்.
விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் திருமணத்தடை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. பாக்கியம் இல்லாதவர்களுக்கு இங்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது தீராத நோய்களும் கோயில் உள்ள கோடி புண்ணிய தீர்த்தத்தில் குளித்தால் நோய்களும் தீரும் என்று சொல்லப்படுகிறது. இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு நிறைவேறிய மக்களுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்துகிறார்கள்.
