MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம்.. தமிழக அரசுக்கு 'குட்டு' வைத்த உச்சநீதிமன்றம்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம்.. தமிழக அரசுக்கு 'குட்டு' வைத்த உச்சநீதிமன்றம்!

பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிரான போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் அனுமதிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Jan 28 2026, 09:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Image Credit : Asianet News

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் முருகன் மலைக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக, அவதூறான கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறப்படும் போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

23
தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்
Image Credit : TNDIPR

தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி.பி. வரலே அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் ஜி.எஸ். மணி தாக்கல் செய்த பொதுநல மனுவின் பேரில், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் சில வழக்கறிஞர் சங்கங்களைச் சேர்ந்த குழுக்கள், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வளாகங்கள் முன்பு போராட்டம் நடத்தி, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
Related image2
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி.. தமிழக அரசிடம் காட்டமான கேள்வி!
33
நீதிபதிக்கு எதிரான போராட்டம் சரியல்ல‌
Image Credit : Asianet News

நீதிபதிக்கு எதிரான போராட்டம் சரியல்ல‌

நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்காக அவர்களை வீதிப் போராட்டங்கள், அரசியல் அழுத்தம் அல்லது சமூக ஊடக மிரட்டல்களுக்கு உள்ளாக்க முடியாது என்றும், ஒரு நீதித்துறை முடிவுக்கு எதிராக மேல்முறையீடு, மறுஆய்வு அல்லது பிற சட்டப்பூர்வ நடைமுறைகள் மட்டுமே அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தீர்வு என்றும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிரான போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் அனுமதிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும், நீதிபதிகள் அச்சமின்றி தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் என்றும் அது மேலும் கூறுகிறது. உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு, மனுதாரர் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக சட்டரீதியான புகார்களை அளித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படவில்லை

மனுவின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, போராட்டக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், மதுரை கிளை கூடுதல் பதிவாளர் மற்றும் சைபர் கிரைம் பிரிவினருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் வாதிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தான் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உச்ச நீதிமன்றம்
திருப்பரங்குன்றம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிமுகவின் நன்மதிப்பை குறைக்க வகையில் முதல்வர் பேசியுள்ளார் ! ஆர்.பி. உதயகுமார் ஸ்டாலினுக்கு பதிலடி
Recommended image2
Now Playing
பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைக்க பிளான் போடும் கோ.தளபதி ....! திமுகவின் உள்ளடி அரசியல்..!
Recommended image3
மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
Related Stories
Recommended image1
நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
Recommended image2
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்துக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி.. தமிழக அரசிடம் காட்டமான கேள்வி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved