- Home
- Astrology
- 30 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் சனி பகவான் நடத்தும் அதிசயம்.! 3 ராசிகளுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகுது.!
30 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் சனி பகவான் நடத்தும் அதிசயம்.! 3 ராசிகளுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகுது.!
Sani Peyarchi Palangal 2026: சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இதனால் தனுசு, கும்பம், மீனம் ராசியினருக்கு அதிர்ஷ்டமும், திடீர் பண வரவும் உண்டாகும். அதுகுறித்து இங்கு காணலாம்.

Saturn Combust in Pisces
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனம் ஆக இருக்கிறார். இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். சனியின் அஸ்தமனம் 2026 மார்ச் 13 அன்று மாலை 7:13 மணிக்கு மீன ராசியில் நடக்கிறது. இதன் தாக்கம் 12 ராசிகளுக்கு இருந்தாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும். அந்த ராசிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்கு சனி அஸ்தமனம் மிகவும் சாதகமான சூழலைக் கொண்டு வரும். இந்த காலக்கட்டத்தில் தனுசு ராசியினருக்கு பொன், பொருள், வசதிகள், நகை, ஆபரணங்கள் பெருகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய மற்றும் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக புதிய வழிகள் திறக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். தாய்வழி உறவுகளுடன் பிணைப்பு வலுப்பெறும்.
கும்பம்
கும்ப ராசிக்கு சனி அஸ்தமனம் நல்ல பலன்களைத் தரும். நீண்டகாலமாக சிக்கி தவித்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கி, திடீர் பண வரவு உண்டாகும். இதன் காரணமாக பழைய கடன்களை அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள். உங்கள் கைக்கு வந்து சேராமல் இருந்த தொகை அல்லது சொத்துக்கள் வந்து சேர வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பு கூடும். தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். கல்வி, ஊடகம், விற்பனை, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியில் சனி அஸ்தமனம் ஆவதால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். தொழில் செய்து வருபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டகால போராட்டங்கள் முடிவுக்கு வரவுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

