ராமதாஸ் கூட்டணியா..? தெறித்து ஓடும் விஜய்.. தவெகவிலும் அடைக்கப்பட்ட கதவு..!
ஜி.கே. மணியும், சேலம் அருளும் தவெக நிர்வாகிகளுடன் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் இரண்டு நாட்களாக ராமதாஸ் தரப்பு விஜய புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. அன்புமணி தரப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை எந்தக் கூட்டணியையும் இறுதி செய்யாமல் தாமதம் செய்து வருகிறது. அன்புமணியின் கூட்டணியை ராமதாஸ் நிராகரித்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, தான் மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ராமதாஸ் தரப்பையும் இணைக்க அதிமுக சார்பில் சமரசம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ராமதாஸோ, தன் தலைமையில் பாமக செயல்பட வேண்டும். தன்னை முன்னிறுத்தியே அனைத்தும் நடக்க வேண்டும் என விடாப்பிடியாக தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து திமுகவுடன் கூட்டணி அமைக்க தூதுவிட்டார் ராமதாஸ். ஆனால் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என திருமாவளவன் கறாராக கூறிவிட்டதால் ராமதாஸுக்கான கதவை அடைத்து விட்டது திமுக.
அடுத்த முயற்சியாக ராமதாஸ் தரப்பில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த ஆலோசனைகள் நடப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தவெக் தரப்பில் இருந்து தெளிவான மறுப்பு வந்துள்ளது," ராமதாஸுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை" என துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு காரணம், விஜய் பக்கம் போக ராமதாஸ் விருப்பம் தெரிவித்த நிலையில் தன்வசம் இருக்கிற பட்டியல் சமூக வாக்குகளுக்கு சேதாரம் ஆகும் என் விஜய் யோசிக்கிறாராம். ஜி.கே. மணியும், சேலம் அருளும் தவெக நிர்வாகிகளுடன் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் இரண்டு நாட்களாக ராமதாஸ் தரப்பு விஜய புகழ்ந்து பேசி வருகிறார்கள். ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால் விஜய் பின்னால் இருக்கிற பட்டியல் சமூக வாக்குகள் பறிபோகும் என விஜய் தரப்பு என்று நினைப்பதால் ராமதாஸுக்கு தவெகவிலும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
