இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:26 AM (IST) Oct 20
Dude Box Office Collection Day 3 Report : காலத்திற்கு ஏற்ப கதைகளும் காட்சிகளும் மாறி வரும் இன்றைய சினிமா உலகில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் 3 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று பார்க்கலாம்.
12:00 AM (IST) Oct 20
ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா நடிக்கும் 'தம்மா' திரைப்படம், அதன் சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளத்தால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள் இங்கே.
11:54 PM (IST) Oct 19
Gomathi wearing a gold bracelet : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளில் அவரது மகள் கோமதி தங்க வளையல் போட்டுவிட்டு அழகு பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி குடும்பத்தோடு ஆத்தாவின் பிறந்தநாளிலும் கலந்து கொண்டுள்ளார்.
10:22 PM (IST) Oct 19
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை அறியாமை மீது ஞானம் ஆகியவற்றின் வெற்றியைக் குறிப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
10:00 PM (IST) Oct 19
உ.பி. அரசின் தீபாவளி செலவுகளை விமர்சித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ளுமாறு கூறினார். அவரது இந்தக் கருத்து இந்து பண்டிகைகளை அவமதிப்பதாக பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
09:45 PM (IST) Oct 19
இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து 176.5 கி.மீ வேகத்தில் பதிவானது. இது ஷோயிப் அக்தரின் உலக சாதனையை முறியடித்ததா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
09:37 PM (IST) Oct 19
Pandian Stores 2 Serial Promo Gandhimathi 75th Birthday : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளை மகன், மகள், பேரன், பேத்திகள், மருமகன் என்று எல்லோரும் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
08:18 PM (IST) Oct 19
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரஃபா சோதனைச் சாவடியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
07:48 PM (IST) Oct 19
பீகார் தேர்தலில் மதுபன் தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால், ஆர்ஜேடி நிர்வாகி மதன் ஷா, லாலு பிரசாத் யாதவ் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.70 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
07:43 PM (IST) Oct 19
Iphone 15 அமேசானில் ஐபோன் 15 வெறும் ₹50,000-க்கும் கீழே! A16 சிப், 48MP கேமரா சிறப்பா? AI ஆதரவு இல்லையா? வாங்கலாமா வேண்டாமா என அலசுவோம்.
07:38 PM (IST) Oct 19
Realme GT 8 Pro ரியல்மியின் புதிய GT 8 Pro ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகிறது. 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், Snapdragon 8 Elite Gen 5 பிராசஸர் மற்றும் 200MP கேமராவுடன் இது சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
07:32 PM (IST) Oct 19
The Brain புதிய ஆய்வில், மூளையின் செவிப்புலன் புறணி (auditory cortex) வெறும் சத்தத்திற்கு எதிர்வினையாற்றுவதில்லை, ஆனால் பணியின் தாளத்திற்கு ஏற்ப அதன் நேரத்தை மாற்றியமைக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
07:10 PM (IST) Oct 19
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால மையத்திற்குச் சென்ற அவர், எந்தப் பெரிய மழையையும் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
06:30 PM (IST) Oct 19
thulam rasi diwali rasi palangal 2025: இந்த தீபாவளி திருநாளை ஒட்டி துலாம் ராசிக்கான ராசி பலன்கள் மற்றும் கிரக நிலைகள் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. துலாம் ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர்.
06:25 PM (IST) Oct 19
The Battery Whisperer உங்கள் போன் பேட்டரி ஆயுளை நீட்டிக்க எளிய அமைப்புகளை அறிக. பிரகாசம், பின்னணி செயலிகள் மற்றும் பவர் சேமிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
06:11 PM (IST) Oct 19
Viruchiga rasi diwali rasi palangal 2025: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளிக்குப் பிறகு தொட்டதெல்லாம் பொன்னாகும் ஒரு பொற்காலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேரதிர்ஷ்டங்களைப் பெறும் காலகட்டமாக இது அமையும்.
05:54 PM (IST) Oct 19
பருவமழையால் நெல்மணிகள் வீணாவதால் விவசாயிகள் கண்ணீர் தீபாவளியைக் கொண்டாடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 22% ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
05:52 PM (IST) Oct 19
Reason Behind Roja Removed from Chiranjeevi Movie : சிரஞ்சீவியுடன் ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை ரோஜா இழந்தார். ஒரே ஒரு பாடலால் சிரஞ்சீவி ரோஜாவை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்தார். அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
05:24 PM (IST) Oct 19
Dhanusu rasi diwali rasi palangal 2025: தீபாவளி முதல் அடுத்த புத்தாண்டு வரையான காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு தன வருவாயில் நல்ல ஏற்றம் இருக்கும். பொருளாதார நிலை அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
05:22 PM (IST) Oct 19
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸி கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் சூப்பராக விளையாடினார்.
05:19 PM (IST) Oct 19
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
05:07 PM (IST) Oct 19
Magara rasi diwali rasi palangal 2025: மகர ராசிக்கு 2025 தீபாவளி பலன்கள் பொதுவாக மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
04:52 PM (IST) Oct 19
சென்னையில் வரும் 23ம் தேதி அதி கனமழைக்கான அரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
04:48 PM (IST) Oct 19
Diwali 2025 Kumba Rasi palangal: தீபாவளிக்கு பிறகு கும்ப ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாக வாய்ப்புள்ளது. முக்கியமாக குரு பகவானின் நிலை, நிதி மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04:47 PM (IST) Oct 19
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வீடுகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர சோதனையில், இது ஒரு புரளி என்பது தெரியவந்தது.
04:23 PM (IST) Oct 19
Diwali 2025 Meena Rasi palangal: அக்டோபர் 20, 2025 தீபாவளி நாளில் மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:18 PM (IST) Oct 19
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. வரும் 22-ஆம் தேதி ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்தி, போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
03:48 PM (IST) Oct 19
தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் அவதூறைப் பரப்புகிறார்கள். திமுகவினர் தவெக பெயரில் அக்கவுண்டை திறந்து தப்புத்தப்பான வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக விஜய் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
03:44 PM (IST) Oct 19
சீனாவில் வசதிபடைத்த பெண்கள், பாரம்பரிய திருமண உறவுகளைத் தவிர்த்து 'கென்ஸ்' எனப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் புதிய கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். இந்த கென்ஸ்கள் கணவனைப் போல பெண்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் அளிக்கின்றனர்.
03:36 PM (IST) Oct 19
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ஓவரில் 136 ரன்கள் எடுத்துள்ளது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
03:02 PM (IST) Oct 19
பலகம் வேணு இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் எல்லம்மா படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்படத்தின் ஹீரோயினும் முடிவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
02:57 PM (IST) Oct 19
Chalisa Yog 2025: வேத ஜோதிடத்தின் படி வலிமை வாய்ந்த சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் அரிய மற்றும் சுபமான கோணத்தில் இணைவதால் ‘சாலிசா ராஜயோகம்’ உருவாகிறது. இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
02:55 PM (IST) Oct 19
கர்நாடகாவில், அரசு விதியை மீறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசு வளர்ச்சி அதிகாரி பிரவீன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
02:51 PM (IST) Oct 19
அமெரிக்காவைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு இந்தியர் கூட இல்லை. அவர்கள் நம்மை பொருளாதார ரீதியாக சுரண்டவும், இந்தியாவையும் இந்தியர்களையும் வளப்படுத்தவும் இங்கு வந்துள்ளனர். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது
02:48 PM (IST) Oct 19
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகாரமிக்க மற்றும் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து “நோ கிங்ஸ்” எனும் பெயரில் மாபெரும் போராட்டங்கள் நடந்தன. 2,700க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 70 லட்சம் மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
02:30 PM (IST) Oct 19
இந்திய ரயில்வே, ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த புதிய போர்வை கவர் வழங்கும் பைலட் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி, பயணிகளுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
02:06 PM (IST) Oct 19
சட்டப்பேரவை தேர்தலில் வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திராவிட கட்சிகள் கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீமான் தனது கெத்தை தொடர்ந்துள்ளார்.
02:00 PM (IST) Oct 19
கரூரில் நிறைய இழப்புகளை, மரணத்தை சந்தித்த குடும்பங்கள்கூட விஜய் மீது உள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. பிள்ளைகளை இழந்தவர்கள்கூட விஜய் மீது அந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்கு அவர் கண்டிப்பாக எதையாவது செய்தாக வேண்டும்.
01:39 PM (IST) Oct 19
Siragadikka Aasai Serial Update: விஜய் டிவி சீரியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடரான, 'சிறகடிக்க ஆசை' சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் பற்றிய தகவலை பார்ப்போம்.
01:31 PM (IST) Oct 19
நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது பள்ளி நாட்களில் நடந்த முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த காதல் கதை தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.