- Home
- Astrology
- Diwali Rasi Palan: குருவின் அருளால் உருவாகும் 3 யோகங்கள்.! ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கப் போகும் மீன ராசியினர்.!
Diwali Rasi Palan: குருவின் அருளால் உருவாகும் 3 யோகங்கள்.! ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கப் போகும் மீன ராசியினர்.!
Diwali 2025 Meena Rasi palangal: இந்த தீபாவளி, மீன ராசிக்காரர்களுக்குச் சிறப்பான, தித்திக்கும் தீபாவளியாக அமையும் என்று கருதப்படுகிறது. பல நல்ல விஷயங்களுக்கு இன்றைய நாள் ஒரு தொடக்கமாக இருக்கும்.

தீபாவளி ராசி பலன்கள் 2025 - மீனம்
யோக ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் குரு உச்சம் பெறுகிறார். 3 மற்றும் 8 ஆம் வீட்டுக்குரிய சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால், சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும்.
தனம் மற்றும் பாக்கியத்திற்கு அதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் ஒன்பதாவது இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். மேலும் குருவின் பார்வை செவ்வாய் மீது விழுவதால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதன் காரணமாக நிலம், வீடு, பூமி போன்றவற்றை வாங்கும் யோகம் உருவாகும். ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி குவிப்பீர்கள்.
சந்திரனுடைய வீட்டில் குரு இருப்பதால் குரு சந்திர யோகம் உருவாவதால் உடல்நலக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியத்துடன் விளங்குவீர்கள்.
குரு பார்வை:
உங்கள் ராசிநாதன் குரு பகவான் இந்த காலகட்டத்தில் யோகாதிபதி வீடான 5-ம் இடத்தில் உச்சம் பெறுகிறார். இது மிகவும் அனுகூலமான ஒரு நிலையாகும். இதன் காரணமாக தொழிலில் சாதனை, குழந்தை பாக்கியம், பண வரவில் திருப்தி போன்ற நற்பலன்கள் உண்டாகும். மேலும், குருவின் பார்வை பல சுப பலன்களைக் கொடுக்கும்.
பண வரவு மற்றும் நிதி நிலை:
யோக ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதன் காரணமாக யோகங்கள் பெருகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பண வரவு திருப்திகரமாக அமையும். பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். வீடு, மனை, சொத்துக்கள், வாகனம் வாங்கும் யோகங்கள் உண்டாகும். புதிய தொழில்களை தொடங்குவீர்கள். வாழ்க்கையில் புதிய லட்சியங்களை அடைவீர்கள்.
குடும்பம் மற்றும் உறவுகள்:
ஐந்தாம் இடத்தில் குரு உச்சம் பெறுவதால் புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாகக் குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் மறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் எதிர்ப்பில் நடந்த காதல் திருமணங்கள் கூட, பெற்றோர்களுடன் இணையும் வாய்ப்பைப் பெறலாம். குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
வேலை மற்றும் தொழில்:
உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிம்மதி கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.
ஆரோக்கியம்:
இதுவரை இருந்து வந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கூடுதல் குறிப்புகள்:
- நிலம் சார்ந்த விஷயங்கள் அல்லது வம்பு வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக முடியும்.
- வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)