- Home
- Astrology
- Astrology: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் குரு-சனி.! விபரீத ராஜயோகத்தால் கோடிகளை குவிக்கப் போகும் 3 ராசிகள்.!
Astrology: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் குரு-சனி.! விபரீத ராஜயோகத்தால் கோடிகளை குவிக்கப் போகும் 3 ராசிகள்.!
Vipreet Rajyog lucky zodiac signs: குரு மற்றும் சனி பகவான் இணைந்து உருவாக்கும் விபரீத ராஜயோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுப பலன்களை கொண்டுவர உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு - சனி சேர்க்கை
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுபவர் குரு பகவான். இவர் ஞானம், கல்வி, அறிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிக்கிறார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு அதிவேகமாக பயணித்து இரண்டு முறை ராசி மாற்றம் அடைந்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மிதுன ராசிக்குள் நுழைந்த அவர், அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்திருக்கிறார். டிசம்பர் 5 வரை இந்த ராசியில் பயணித்து மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
விபரீத ராஜயோகம் எப்படி உருவாகிறது?
அதேசமயம் சனி பகவான் குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் வக்ர நிலையில் அதாவது பின்னோக்கிய நிலையில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் குரு மற்றும் சனி இருவரும் இணைந்து விபரீத ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். ஜோதிடத்தின் படி மிகவும் மர்மயமான ராஜயோகங்களில் ஒன்றாக விபரீத ராஜயோகம் இருக்கிறது. ஒரு கிரகம் ஆறாவது, எட்டாவது அல்லது 12ஆவது வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது இந்த ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
- சிம்ம ராசியின் ஆறாவது மற்றும் ஏழாவது வீடுகளை சனிபகவான் ஆட்சி செய்கிறார்.
- இந்த விபரீத ராஜ யோகத்தின் பொழுது சிம்ம ராசியின் எட்டாவது வீட்டில் சனி பெயர்ச்சி ஆகிறார்.
- குரு பகவான் 12 வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது.
- உங்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
- நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
- தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் நன்மை கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரிகள் கணிசமான பயன்களைப் பெறுவீர்கள்.
- நிதி அடிப்படையில் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
துலாம்
- குரு மற்றும் சனி உருவாக்கும் விபரீத ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்க உள்ளது.
- சனி துலாம் ராசியின் ஆறாவது வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார்.
- குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் பெயர்சியாகிறார்.
- இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
- தொழிலில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
- அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் பல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
- நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.
- உங்களின் பொருளாதார நிலை வேகமாக முன்னேற்றத்தை அடையும்.
- வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் மகிழ்ச்சி ஏற்படும்.
- வேலையில் உங்கள் நிலை வலுப்பெறும் வாழ்க்கையில் புதிய வெற்றிகள் தேடி வரும்.
தனுசு
- குரு மற்றும் சனி பகவான் இணைவதால் தனுசு ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.
- உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்த அனைத்து வேறுபாடுகளும் நீங்கும்.
- குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி, மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிதி ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
- தொழிலில் இருந்த போட்டியாளர்கள் மற்றும் எதிரிகள் விலகி ஓடுவார்கள். இதன் காரணமாக வருமானம் இரட்டிப்பாகும்.
- லாபம் பெருகும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
- பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)