- Home
- Astrology
- Astrology: 800 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் உருவாகும் 5 ராஜயோகங்கள்.! 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!
Astrology: 800 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் உருவாகும் 5 ராஜயோகங்கள்.! 4 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப் போகுது.!
Diwali 2025 Rasi palangal: ஜோதிடத்தின்படி 800 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் 5 ராஜயோகங்கள் உருவாக உள்ளன. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

800 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் 5 ராஜயோகங்கள்
தீபாவளிப் பண்டிகையானது, இந்துக்கள் கொண்டாடும் புனிதமான மற்றும் மகத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். இந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தத் தீபத் திருநாள், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாக அமைகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தினத்தில் அரிய கிரக நிலை மாற்றங்கள் நிகழ்ந்து, ஒரே நேரத்தில் ஐந்து சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகவிருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.
இந்த அரிய கிரகங்களின் சேர்க்கை, பல ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், செல்வச் செழிப்பையும் வாரி வழங்கக்கூடியதாக இருக்கும். இந்த யோகங்களின் சேர்க்கையால், சில ராசியினர் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பண வரவையும் காண உள்ளனர்.
தீபாவளியன்று உருவாகும் முக்கிய ராஜயோகங்கள்:
- ஹன்ஸ் மஹாபுருஷ் ராஜயோகம்: இது குரு பகவானால் உண்டாக்கப்படும் ஒரு சுப யோகம். இது ஆன்மீக முன்னேற்றம், செல்வாக்கு மற்றும் ஞானத்தை அளிக்கும்.
- புதாதித்ய ராஜயோகம்: இது புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகிறது. இது அறிவு, புத்திசாலித்தனம், பேச்சுத் திறன் மற்றும் சமூகத்தில் மரியாதை ஆகியவற்றை அதிகரிக்கும்.
- ஆதித்ய மங்கள யோகம்: சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் இணைப்பால் உருவாகும் இந்த யோகம், துணிச்சல், தலைமைப் பண்பு மற்றும் அபாரமான ஆற்றலைத் தரும்.
- கலாநிதி யோகம்: இது கலை, படைப்பாற்றல் மற்றும் செல்வம் ஆகியவற்றுக்கு உரிய யோகமாகும்.
- வைபவ் லட்சுமி ராஜயோகம்: இது சந்திரன் மற்றும் சுக்கிரனின் அரிய சேர்க்கையால் கன்னி ராசியில் உருவாகும் யோகம் என்று சில கணிப்புகள் கூறுகின்றன. இது சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவிருப்பதாகவும், அன்னை மகாலட்சுமியின் அருளை முழுமையாகப் பெற்று செல்வத்தை அள்ளித் தரும் என்றும் நம்பப்படுகிறது.
அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்:
- கடக ராசி: இந்த ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய பொறுப்புகளும், பதவிய உயர்வுகளும் கிடைக்கும்.
- மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும்.
- துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் சுப பலன்களைப் பெறுவார்கள். வேலையில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதுடன், பதவி உயர்வும் கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும், வருமானம் அதிகரிக்கும்.
- கன்னி ராசி: வைபவ் லட்சுமி ராஜயோகம் இந்த ராசியில் உருவாகுவதால், கன்னி ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். பண வரத்து தாராளமாக இருக்கும்.
(குறிப்பு: ஜோதிடப் பலன்கள் என்பது பொதுவான கணிப்புகளே. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் கிரக நிலைகளைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் இருக்கலாம். அனைவரும் தீபாவளியன்று அன்னை மகாலட்சுமியை மனதார வழிபட்டு, ஒளியேற்றி, மகிழ்ச்சியுடன் கொண்டாடினால் நிச்சயம் வாழ்வில் வளம் பெருகும்)