விஜய் அவருடன் இருக்கும் சகவாசங்களை கட் பண்ணிக்கணும்..! நடிகை கஸ்தூரி அட்வைஸ்..!
கரூரில் நிறைய இழப்புகளை, மரணத்தை சந்தித்த குடும்பங்கள்கூட விஜய் மீது உள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. பிள்ளைகளை இழந்தவர்கள்கூட விஜய் மீது அந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்கு அவர் கண்டிப்பாக எதையாவது செய்தாக வேண்டும்.

“விஜய் அவருடன் இப்போது இருக்கிற சகவாசங்கள விட்டுவிட வேண்டும்’’ என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நிர்வாகி கஸ்தூரி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘எல்லாருடைய குறிக்கோளும் ஒன்றுதான். இப்போது இருக்கக்கூடிய இந்த விடியா ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற குறிக்கோளில்தான் எல்லாருக்கும் இருக்கிறது. அது டிடிவி.தினகரனுக்கும் இருக்கிறது. விஜய்க்கும் இருக்கிறது. எல்லாருக்குமே இருக்கிறது. பாஜக, அதிமுக எல்லாருமே அதைத்தான் நோக்கி பயணம் செய்கிறார்கள். அடுதான், சிறப்பாக இருக்கும். அதுதான் சரியாக வரும். விஜய் தலைமையில் ஒரு கூட்டணி என்பது இந்த கரூர் சம்பவத்திற்கு பிறகு சரியாக இருக்காது. விஜய்க்கு துணையாக கரூர் மக்கள்கூட நிற்கிறார்கள்.
ஆனால் அவர் கட்சியில் இருப்பவர்கள் அவருடன் இருப்பதாக தெரியவில்லை. நான் கொஞ்சம் ஜாடைமாடையாகச் சொல்கிறேன். விஜயை சுற்றி இருப்பவர்களது சவகாசங்களை கட் பண்ணி விட்டு கொஞ்சம் புதிதாக சில விஷயங்களை முன்னெடுத்து வைக்க வேண்டும். நான் இவ்வளவு தான் சொல்லுவேன். அது ஆணோ, பெண்ணோ... அதெல்லாம் கூட நான் சொல்லவில்லை. அவர் சுயமாக முடிவெடுத்து மக்களுக்கான தலைவனாக வெளியே வந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் இப்போது அவருக்காக அவர் மேல் வைத்துள்ள நம்பிக்கை கொஞ்சம் கூட போகாமல் இருக்கிறது.
கரூரில் நிறைய இழப்புகளை, மரணத்தை சந்தித்த குடும்பங்கள்கூட விஜய் மீது உள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. பிள்ளைகளை இழந்தவர்கள்கூட விஜய் மீது அந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்கு அவர் கண்டிப்பாக எதையாவது செய்தாக வேண்டும். இப்படி வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பது எதனால் என்பதற்கு நான்கு விதமாக, 4000 விதமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த பேச்சை எல்லாம் முடித்துவிட்டு அவர் வெளியே வந்தால் தான் சரியாக இருக்கும்.
ஆந்திராவின் பவன் கல்யாண் உதாரணத்தை எடுத்துக்கொண்டு அவர் மாற்றத்திற்காக ஒரு படை வீரராக, படைத் தளபதியாக மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டுமே தவிர, அவரை தலைவராக வேண்டும் என இந்த சமயத்தில் நினைக்கக்கூடாது. அதைவிட மாற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுதான் சிறப்பாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.