தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் அவதூறைப் பரப்புகிறார்கள். திமுகவினர் தவெக பெயரில் அக்கவுண்டை திறந்து தப்புத்தப்பான வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக விஜய் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் எந்தவித விளம்பரமும் இன்றி தவெக சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் நிவாரணத் தொகையாக தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், TVK_headoffice எக்ஸ்தளக்கணக்கில் விஜய் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கைகளை உயர்த்தும் படத்தை போட்டு ரூ.20 லட்சம் போட்டாச்சு எனப் பதிவிடப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனை மேற்கோள் காட்டி திமுகவினர் கடும் விமர்சங்களை பதிவிட்டு வருகின்றனர்.

‘‘அழுவதில் கூட அர்த்தங்களை வெளிப்படுத்துவது தமிழர் மரபு. ஒரு பெண் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதால்,பெற்ற பிள்ளை இறந்துவிட்டான் என்று பொருள். அது வயிற்றிலிருந்து வந்தது என்பதன் அடையாளம்.மார்பில் அடித்துக்கொண்டு அழுதால், கணவன் இறந்துவிட்டான் என்று பொருள். அவனை மார்பில் தாங்கியவள் என்று பொருள். தலையில் அடித்துக் கொண்டு அழுதால், தவறு செய்து இறந்துவிட்டான் என்று பொருள். சிந்தனை தலையிலிருந்து உருவாகுகிறது என்ற பொருளில் தப்பு பண்ணிட்டேனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவார்கள்.
இது என்ன மாதிரியான மரபு என்று தெரியவில்லை? குடும்பங்களை இழந்தவர்களுக்கு கொடுக்கும் ஒரு எளிய உதவியைக்கூட தீபாவளிக்கு போனஸ் போட்ட மாதிரி சிரிப்பு. காட்டுமிராண்டிகளுக்கு ஒரு மரபு உண்டு.கல்யாண வீட்டில் காலை நீட்டி அழுவார்கள். எழவு வீட்டில் கைதட்டி சிரிப்பார்கள் என திமுகவினர் பாய்ந்து வருகின்றனர். இந்நிலையில் இது தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை என்று தவெக மறுப்புத் தெரிவித்துள்ளது. அந்தக் கணக்கை திமுகவினரே உருவாக்கியதாகவும் அதன் மூலம் தங்கள் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாகவும் தவெக குற்றம்சாட்டியுள்ளது.

48 ஆயிரம் ஃபாலோயர்ஸ் கொண்ட அந்த கணக்கில் திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இப்போது தவெக தலை அலுவலகம் என மாற்றி விஜய் புகைப்படத்தை வைத்து பொய்யைப் பரப்பி வருகிறார்கள். தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் அவதூறைப் பரப்புகிறார்கள். திமுகவினர் தவெக பெயரில் அக்கவுண்டை திறந்து தப்புத்தப்பான வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக விஜய் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
