கொளுத்தி போட்ட அருண்... மீனாவிடம் சண்டைக்கு சீரிய சீதா! முத்து செய்யப்போவது என்ன?
Siragadikka Aasai Serial Update: விஜய் டிவி சீரியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடரான, 'சிறகடிக்க ஆசை' சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் பற்றிய தகவலை பார்ப்போம்.

சிறகடிக்க ஆசை சீரியல்:
விஜய் டிவி தொலைக்காட்சியில், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத விதமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் 'சிறகடிக்க ஆசை'. காதல், செண்டிமெண்ட், எமோஷன், காமெடி, வில்லத்தனம் என ஒரு ஜனரஞ்சகமான கதைக்களத்தில், எதிர்பாராத திருப்பு முனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
வளர்ச்சி பாதையில் மீனா:
இந்த சீரியலில் செய்யாத தவறுக்காக, அம்மாவின் கோபத்திற்கு ஆளாகும் ஹீரோ வெற்றி, அம்மாவின் அன்பை பெற போராடி வருகிறார். அதே போல் ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்பாவின் மானத்தை காப்பாற்ற மீனா என்கிற பூ விற்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்களுடைய அடுத்த கட்ட வளர்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறாரகள்.
மீனாவுக்கு துணை நிற்கும் முத்து:
மீனாவை, முத்துவின் அம்மா விஜய்யா எதற்கும் உதவாதவன் என திட்டிக்கொண்டே இருந்த நிலையில், மீனா தற்போது ஆன்லைன் மூலம் பூ பிஸினஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதோடு, பல மண்டபங்களில் பூ டிகெரேஷன் பண்ணும் ஆண்டார்கள் எடுத்து செய்ய துவங்கி விட்டார். இதன் மூலம் நல்ல லாபமும் பார்த்து வருகிறார். இவருக்கு எதிராக சிலர் தீட்டும் சதிகளை கணவர் முத்துவுடன் சேர்ந்து முறியடிப்பதையும் பார்த்து வருகிறோம்.
அடுத்த எபிசோட்:
இந்நிலையில், அடுத்து வரும் எபிசோட் குறித்த புரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில், "கடந்த வாரம் இந்த தொடரில், பைக்கில் வேகமாக வந்த ஒருவன் தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை இடித்துவிட்டு நிற்காமல் வேகமாக வண்டியை ஓட்டி சென்றான்.
அருண் சஸ்பெண்ட்:
இந்த சம்பவத்தை பார்த்த அருண் வேகமாக அந்த நபரை செல்ல, எதேர்சையாக அங்கு வந்த முத்து கீழே படுகாயத்தோடு விழுந்து கிடந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். இதனால் முத்துவிற்கு நல்ல பெயர் கிடைக்க, அங்கிருந்த மக்கள் போலீஸை குறை சொல்ல, அந்த ஏரியாவில் டியூட்டி பார்த்த அருணுக்கு சஸ்பென்ஷன் கிடைக்கிறது.
சண்டைக்கு செல்லும் சீதா:
அங்கு என்ன சூழ்நிலை இருந்தது என்பது தெரிந்தும், தனக்கு கிடைத்த சஸ்பென்ஸனால் கடுப்பான அருண், இதற்கெல்லாம் முத்துதான் காரணம் என சீதாவிடம் கூற, உடனடியாக மீனாவிடம் சென்று, முத்து இதற்காக அருணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி சீறிக்கொண்டு சண்டைக்கு பாய்கிறார்.
மீனா எடுத்த அதிரடி முடிவு:
ஏற்கனவே ஒரு பிரச்சனைக்காக முட்டிக்கொண்டு அக்கா தங்கைகள், மீண்டும் இந்த பிரச்சனைக்காக சண்டை போட்டு கொள்கிறார்கள். சீதா மாமா மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்க, தன்னுடைய கணவர் செய்ததில் எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொண்ட மீனா... இந்த சஸ்பெண்க்ஷனுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரே மன்னிப்பு கேட்க சரி என கூறினாலும், நான் கேட்க விடமாட்டேன் என முத்துவுக்கு ஆதரவாக நிற்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்புடன் இந்த புரோமோ வெளியாகி உள்ளது.