- Home
- Astrology
- Diwali Rasi Palan: தீபாவளி முதல் கோடிகளில் புரளப்போகும் தனுசு ராசியினர்.! பேங்க் பேலன்ஸ் உயரும்.!
Diwali Rasi Palan: தீபாவளி முதல் கோடிகளில் புரளப்போகும் தனுசு ராசியினர்.! பேங்க் பேலன்ஸ் உயரும்.!
Dhanusu rasi diwali rasi palangal 2025: தீபாவளி முதல் அடுத்த புத்தாண்டு வரையான காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு தன வருவாயில் நல்ல ஏற்றம் இருக்கும். பொருளாதார நிலை அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தீபாவளி ராசி பலன்கள் 2025 - தனுசு
தனுசு ராசிக்காரர்களின் ராசியின் அதிபதியான குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சி அடைந்து, கடக ராசிக்குள் வருகிறார்.
அவர் இந்த ராசியில் உச்சமடைந்து தனுசு ராசியின் ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாவது வீட்டை பார்வையிடுகிறார்.
இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் நேர்மையான பலன்களை அனுபவிக்க உள்ளனர். ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால் எதிர்பாராத யோகங்கள் வந்து சேர உள்ளது.
குடும்ப உறவுகள்:
ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால் எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். உங்கள் லட்சியங்களை நோக்கிய அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் குரு பகவான் குறைவில்லாமல் கொடுப்பார். மேலும் 12-ஆம் இடமான இல்வாழ்க்கை மற்றும் சுகத்தின் வீட்டை குரு பகவான் பார்க்கிறார். இதன் காரணமாக இல்லறம் செழிக்கும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் பொங்கும்.
நிதி நிலைமை:
குரு பகவானின் அருளால் எதிர்பாராத பணம் வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். கூடுதல் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இரண்டாம் இடத்தை குரு பார்க்கும் பொழுது புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.
வீடு வாங்கும் யோகம்:
நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் உயர்கல்வி, உயர் பதவி ஆகியவை ஏற்படும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலையிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கல்விலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீடு, மனை, கார் வாங்கும் யோகம் உண்டாகும். 12-ஆம் இடத்தில் ஆட்சி பெறும் செவ்வாயை குரு பார்ப்பதால் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த காலகட்டம் அதிர்ஷ்டத்தின் ஒட்டுமொத்த கதவுகளையும் திறக்கும்.
பொருளாதார முன்னேற்றம்:
தீபாவளிக்குப் பிறகான காலம் பணத்தை சம்பாதிப்பதற்கான வழிகளை உருவாக்கும். இலக்கை நிர்ணயித்து சம்பாதிக்க தொடங்குவீர்கள். உங்கள் பொருளாதார நிலைமை கணிசமாக முன்னேற்றத்தை அடையும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)