- Home
- Tamil Nadu News
- சென்னையில் விடாது கொட்டப் போகும் கனமழை! ஆரஞ்சு அலர்ட்! தேதி குறித்த வானிலை மையம்!
சென்னையில் விடாது கொட்டப் போகும் கனமழை! ஆரஞ்சு அலர்ட்! தேதி குறித்த வானிலை மையம்!
சென்னையில் வரும் 23ம் தேதி அதி கனமழைக்கான அரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுக்கும் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
மேலும் சென்னையில் வரும் 23ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்ட மலைப்பகுதிகள், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தீபாவளி நாளிலும் மழை தான்
நாளை தீபாவளி நாள் அன்றும் தமிழகத்தில் 18-10-2025: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வேலூர், கடலூர்
22ம் தேதியும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.