MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: வெறித்தனமான பவுலிங்.. அக்தர் சாதனையை ஊதித் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!

IND vs AUS: வெறித்தனமான பவுலிங்.. அக்தர் சாதனையை ஊதித் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து 176.5 கி.மீ வேகத்தில் பதிவானது. இது ஷோயிப் அக்தரின் உலக சாதனையை முறியடித்ததா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Oct 19 2025, 09:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மிட்செல் ஸ்டார்க் அதிவேகப் பந்துவீச்சு சாதனை!
Image Credit : X

மிட்செல் ஸ்டார்க் அதிவேகப் பந்துவீச்சு சாதனை!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு பந்து 176.5 கிலோமீட்டர் வேகத்தில் பதிவானது, இது உலக கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கலாம் என்ற ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
26 ஓவர் போட்டி
Image Credit : Getty

26 ஓவர் போட்டி

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இன்று பெர்த்தில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. மழையின் காரணமாக இப்போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மா (8), விராட் கோலி (0), கில் (10) போன்றோர் ஏமாற்றமளிக்க, 26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 23-ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற உள்ளது.

34
வேகத்தில் வியப்பூட்டிய ஸ்டார்க்
Image Credit : X/ Johns.

வேகத்தில் வியப்பூட்டிய ஸ்டார்க்

இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு எதிராக வீசிய பந்தின் வேகம், கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

வேக கண்காணிப்புக் கருவி (Speed Gun) அந்தப் பந்தின் வேகத்தை 176.5 கிலோமீட்டர் என்று பதிவு செய்தது. பொதுவாக, ஸ்டார்க் 140 முதல் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசுபவர் என்ற நிலையில், இந்த அதிவேகப் பதிவு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

44
சாதனை முறியடிக்கப்பட்டதா?
Image Credit : Asianet News

சாதனை முறியடிக்கப்பட்டதா?

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை பாகிஸ்தானின் ஷோயிப் அக்தர் (161.3 கி.மீ) வைத்திருக்கிறார். ஸ்டார்க் வீசிய இந்தப் பந்து உண்மையாகவே 176.5 கி.மீ வேகத்தில் சென்றிருந்தால், அது அக்தரின் 22 ஆண்டுகால சாதனையைத் தகர்த்திருக்கும்.

இருப்பினும், பந்துவீச்சின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாகப் பதிவானதால், இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கிரிக்கெட் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பந்தின் உண்மையான வேகம் குறித்து தெளிவான தகவல் இல்லை என்றாலும், ஸ்டார்க் தனது வேகப்பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

வேகக் கண்காணிப்புக் கருவியின் பிழையே இதற்குக் காரணம் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளபோதும், இந்த அதிவேகப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி கிரிக்கெட் உலகில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Related Stories
Recommended image1
IND vs AUS: 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கி ஏமாற்றிய ரோ‍‍கித்‍-கோலி! சொல்லி வைத்து தூக்கிய ஆஸி. பவுலர்ஸ்!
Recommended image2
விடைபெறுகிறேன்..! டி20 கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ஆஸி. ஜாம்பவான் மிட்சல் ஸ்டார்க்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved