ஆகஸ்ட் 7ல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.

12:07 AM (IST) Jun 08
ஆப்பிள் ஐபோன் 12 மினி குறைந்த விலையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அவை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
11:06 PM (IST) Jun 07
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றிருந்த சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது.
10:41 PM (IST) Jun 07
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான காரணத்தை மறைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.
10:41 PM (IST) Jun 07
தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சி அமைக்க எப்படி கூட்டணி அமைத்தோமோ, அதுபோல் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
10:13 PM (IST) Jun 07
முதுமையின் காரணமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்கள்.பிரிந்தார்கள் என்று சொல்வதை விட - நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல - மறைந்திருந்து நம்மை தலைவர் கலைஞர் அவர்கள் கண்காணித்து இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
09:38 PM (IST) Jun 07
கலைஞரின் பிறந்த நாளை மாநில சுய ஆட்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
08:15 PM (IST) Jun 07
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
07:53 PM (IST) Jun 07
தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
07:19 PM (IST) Jun 07
ஒடிசாவின் ஜாஜ்பூரில் சரக்கு ரயிலில் 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
07:05 PM (IST) Jun 07
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
06:43 PM (IST) Jun 07
சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) ஆனது 6.7-இன்ச் முழு-HD+ sAMOLED+ டிஸ்ப்ளே 120Hz ரிப்பிரேஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உடன் வருகிறது. இந்த மொபைலை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை இங்கு பார்க்கலாம்.
06:26 PM (IST) Jun 07
ஒடிசாவில் ரூ.17 லட்சம் இழப்பீட்டை பெற உயிருடன் இருக்கும் கணவரை இறந்துவிட்டதாக பெண் ஒருவர் அறிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
05:55 PM (IST) Jun 07
ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏவான ஆர்.வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
05:08 PM (IST) Jun 07
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
05:03 PM (IST) Jun 07
கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
04:55 PM (IST) Jun 07
நேபாளம் மற்றும் பாகிஸ்தானுக்குப் பிறகு, பங்களாதேஷ் இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஒரு சுவரோவியம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளது.
04:28 PM (IST) Jun 07
16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்த குஜராத்தை சேர்ந்த இருதயநோய் மருத்துவர் கவுரவ் காந்தி, மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
04:25 PM (IST) Jun 07
மின்கட்டண உயர்வைத்தொடர்ந்து கர்நாடகாவில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
04:25 PM (IST) Jun 07
பாஜக கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
04:24 PM (IST) Jun 07
ஒடிசா மாநில ரயில் விபத்தையடுத்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான குழு அச்சம்பவத்தை எப்படி கையாண்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது
03:57 PM (IST) Jun 07
38,480 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பு வெளியாகி உள்ளது.
02:52 PM (IST) Jun 07
உலகம் முழுவதும் உள்ள சுமார் 66 கோடி மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் மின்சாரம் இல்லாமல் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
02:20 PM (IST) Jun 07
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
02:05 PM (IST) Jun 07
நடிகர் அஜித், தன்னுடைய ஏகே மோட்டோ ரைடு என்கிற பிசினஸிற்காக வெளிநாட்டில் இருந்து 10 விலையுயர்ந்த பைக்குகளை இறக்குமதி செய்துள்ளாராம்.
01:33 PM (IST) Jun 07
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
01:08 PM (IST) Jun 07
நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது. மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். ஜூலை முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
01:08 PM (IST) Jun 07
மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூடியுள்ளார்
01:07 PM (IST) Jun 07
ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக வெளியான தகவல் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்
01:07 PM (IST) Jun 07
ஆவின் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
01:06 PM (IST) Jun 07
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
01:06 PM (IST) Jun 07
இந்திய ஜனநாயகத்தை பற்றிய வெள்ளை மாளிகையின் கருத்தையடுத்து, ராகுல் காந்தியை பாஜக கடுமையாக சாடியுள்ளது
01:05 PM (IST) Jun 07
கேஸ் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
12:39 PM (IST) Jun 07
ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திருப்பதியில் நேற்று பிரம்மாண்ட நடைபெற்ற நிலையில், அதில் தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் பிரபாஸ் வெளியிட்டு உள்ளார்.
12:11 PM (IST) Jun 07
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்துள்ளார் விஜய்.
12:00 PM (IST) Jun 07
வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஆவின் பால் திருட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.
11:47 AM (IST) Jun 07
10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ம் தேதி சந்திக்க உள்ள நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
11:22 AM (IST) Jun 07
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் 173 நாட்களுக்கு பின் ஓடிடிக்கு வந்துள்ளது.
10:33 AM (IST) Jun 07
புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடலுக்கு சுட்டிக் குழந்தை ஒன்று கியூட்டாக நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
10:12 AM (IST) Jun 07
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
08:51 AM (IST) Jun 07
குழந்தையின் புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்ட ரசிகருக்கு மறுப்பு தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் பாடகி சின்மயி.