Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி நூற்றாண்டு விழா: 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

On the occasion of Karunanidhi centenary celebrations, Chief Minister M.K.Stalin launched a plan to plant 5 lakh saplings
Author
First Published Jun 7, 2023, 8:13 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!” தமிழினத் தலைவர் கலைஞர் சொன்னது. அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நாம் சென்றால், இந்தப் பொன்மொழியே நம்மை வரவேற்கும்! தலைவர் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் திறந்து வைத்தேன்” என்று பதிவிட்டார்.

இன்றைய தினம் தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!

On the occasion of Karunanidhi centenary celebrations, Chief Minister M.K.Stalin launched a plan to plant 5 lakh saplings

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

Follow Us:
Download App:
  • android
  • ios