திருப்பதி கோவில் வளாகத்தில் கீர்த்தி சனோனை திடீரென கட்டிபிடித்து கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனர்- வைரல் வீடியோ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.
ஆதிபுருஷ் படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று திருப்பதியில் நடைபெற்றது. இதற்காக திருப்பதி வந்த நடிகர் பிரபாஸ் நேற்று அதிகாலையில், திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இதையடுத்து இன்று காலை ஆதிபுருஷ் படத்தின் இயக்குனரும், நடிகை கீர்த்தி சனோனும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தனர்.
இதையும் படியுங்கள்... திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த பிரபாஸ்... தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டி பிரார்த்தனை
இருவரும் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றிபெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வெளியே வந்த இருவரும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் ஏறி கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப இயக்குனர் ஓம் ராவத் காரின் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிக்க வந்த நடிகை கீர்த்தி சனோனுக்கு இயக்குனர் ஓம் ராவத் சட்டென முத்தம் கொடுத்துவிட்டார். அவரின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத கீர்த்தி சற்று ஜெர்க் ஆனார். பின்னர் காரில் ஏறி கிளம்பி சென்றார். ஆதிபுருஷ் இயக்குனரின் இந்த செயல் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... கீர்த்தி சனோனை அருகில் வைத்துக்கொண்டே திருமணம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்