கீர்த்தி சனோனை அருகில் வைத்துக்கொண்டே திருமணம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்
ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திருப்பதியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் பிரபாஸ் வெளியிட்டு உள்ளார்.
பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தவர் பிரபாஸ். பாகுபலி வெற்றிக்கு பின்னர் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படங்களாகவே தயராகி வருகின்றன. தற்போது அவர் நடிப்பில் ஆதிபுருஷ் என்கிற பிரம்மாண்ட திரைப்படம் தயாராகி உள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. வருகிற ஜூன் 16-ந் தேதி இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது படு ஜோராக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று திருப்பதியில் இப்படத்தின் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடந்தது. இதற்காக அதிகாலையிலேயே திருப்பதி வந்த நடிகர் பிரபாஸ், நேராக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கோவில் முன் குவிந்ததால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதையும் படியுங்கள்... பொதுத்தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்த விஜய்.. எங்கு? எப்போது? வெளியான அதிரடி அறிக்கை
இதையடுத்து போலீசார் உதவியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் பிரபாஸ். பின்னர் மாலை திருப்பதியில் நடைபெற்ற பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் கலந்துகொண்டார் பிரபாஸ். ஓபன் கிரவுண்டில் நடைபெற்ற இந்த விழாவில் ரசிகர்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர். பிரபாஸ் தவிர, ஆதிபுருஷ் படத்தின் இயக்குனர் ஓம் ராவத், நடிகை கீர்த்தி சனோன் உள்பட படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ரசிகர்கள் நடிகர் பிரபாஸிடம் சில கேள்விகளை கேட்டனர். அதில் குறிப்பாக ஒரு ரசிகர் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரபாஸ் “கல்யாணம் என்றாவது ஒரு நாள் நடக்கும். ஆனால் கண்டிப்பாக திருப்பதியில் தான் என்னுடைய திருமணம் நடக்கும் என அறிவித்தார். அப்போது நடிகை கீர்த்தி சனோனும் அருகில் இருந்தார். ஆதிபுருஷ் படத்தில் நடித்தபோது பிரபாஸும், கீர்த்தி சனோனும் டேட்டிங் செய்ததாக செய்திகள் பரவியதோடு, அவர்கள் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் கீர்த்தி சனோன் இதனை திட்டவட்டமாக மறுத்து அது வெறும் வதந்தி எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படியுங்கள்... சமந்தாவே தோத்துடுவாங்க போல... புஷ்பா பட பாடலுக்கு சுட்டிக் குழந்தை ஆடிய கியூட் டான்ஸ் - வைரலாகும் வீடியோ