சமந்தாவே தோத்துடுவாங்க போல... புஷ்பா பட பாடலுக்கு சுட்டிக் குழந்தை ஆடிய கியூட் டான்ஸ் - வைரலாகும் வீடியோ

புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடலுக்கு சுட்டிக் குழந்தை ஒன்று கியூட்டாக நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Little girl cute dance for Pushpa movie samantha's oo solriya song viral video

பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்திருந்தனர். புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். அப்பாடலும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இப்பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.

புஷ்பா படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம்பெற்ற பாடலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் தொடங்கி ஊ சொல்றியா மாமா பாடல் வரை அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இந்த பாடல்களுக்கெல்லாம் இசையமைத்தது தேவி ஸ்ரீ பிரசாத் தான். குறிப்பாக அதில் இடம்பெற்ற ஊ சொன்றியா மாமா என்கிற பாடல் ரிலீசுக்கு முன்பே ஹிட் ஆனாலும், ரிலீஸுக்கு பின் அப்பாடல் வேறலெவல் ரீச் ஆனது.

இதையும் படியுங்கள்... என் குழந்தை... வைரமுத்து போல் இல்லைனு சொல்வானுங்க - மகன்கள் குறித்த கேள்விக்கு சின்மயி அளித்த பளீச் ரிப்ளை

அந்தப்பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதற்கு நடிகை சமந்தா தான் முக்கிய காரணம். இதுவரை இல்லாத வகையில் படு கவர்ச்சியாக அப்பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார் சமந்தா. அப்பாடலை பார்க்கவே தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்து வந்த சம்பவங்களும் அரங்கேறின. இந்த பாடல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் ஒரு சுட்டிக் குழந்தை தான்.

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சுட்டிக் குழந்தை ஒருவர் சமந்தாவைப் போல் செம்ம கியூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. அந்த குழந்தையின் நடனத்தை பார்த்த நெட்டிசன்கள், சமந்தாவையே மிஞ்சும் அளவுக்கு நடனமாடுவதாக பாராட்டி வருகின்றனர். அந்த டான்ஸ் வீடியோவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... பென்னி தயாளை கரம்பிடித்து 7 ஆண்டுகளுக்கு பின்... திருமணம் பற்றிய பலரும் அறிந்திடாத சீக்ரெட்டை பகிர்ந்த மனைவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios