Asianet News TamilAsianet News Tamil

16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவர் மாரடைப்பால் மரணம்!

குஜராத்தை சேர்ந்த இருதயநோய் மருத்துவர் கவுரவ் காந்தி, மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 41.

Gujarat Cardiologist Gaurav Gandhi died of a heart attack who performed
Author
First Published Jun 7, 2023, 4:17 PM IST

குஜராத் மாநிலம் ஜாம் நகரை சேர்ந்தவர் கவுரவ் காந்தி. புகழ்பெற்ற இருதய நோய் மருத்துவரான இவர், நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 41. குஜராத் மாநிலத்தின் சிறந்த மற்றும் இளம் வயது மருத்துவரான அவரது மறைவு மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கவுரவ் காந்தி தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, தனது இல்லத்துக்கு வந்த அவர், உறக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு திரும்பிய அவர் எப்போதும் போல், சாதரண உணவை சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றதாகவும், அவரது செயல்பாடுகளில் எந்த அசௌகரியமும் இல்லை எனவும், எப்போதும் போல் சாதாரணமாகவே அவர் காணப்பட்டார், எந்த பிரச்சனையையும் அவர் குறிப்பிடவில்லை, அவரது உடல்நிலை சாதாரணமாகவே இருந்தது என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

51 மணி நேரம்... 2300 பணியாளர்கள்... ரயில் விபத்தை எப்படி கையாண்டது அஸ்வினி வைஷ்ணவ் குழு?

ஆனால், மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்கவில்லை. வழக்கமாக காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் கொண்ட கவுரவ் காந்தி, படுக்கையில் இருந்து எழுந்து வராததால், அவரது குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், அவர் படுத்தபடுக்கையாக இருக்கவே, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தார் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கவுரவ் காந்தியின் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கவுரவ் காந்தி தனது மருத்துவ சேவையில் இதுவரை 16,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios