Asianet News TamilAsianet News Tamil

கலைஞரின் பிறந்த நாளை இந்த நாளாக மாற்ற வேண்டும்.. மு.க ஸ்டாலினுக்கு வேண்டுகோளை விடுத்த திருமாவளவன்

கலைஞரின் பிறந்த நாளை மாநில சுய ஆட்சி நாளாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thirumavalavan request to cm mk stalin about karuanidhi birthday
Author
First Published Jun 7, 2023, 9:36 PM IST

இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் திமுகவும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் பேசிய வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், "வரலாற்று சிறப்பு மிகுந்த எழுச்சி விழா இது.

Thirumavalavan request to cm mk stalin about karuanidhi birthday

தலைவர் கலைஞர் என்றால் பேரறிஞர் அண்ணா என விடைகிடைக்கும். மாபெரும் பேராளுமை முத்தமிழறிஞர் கலைஞர். பேரறிஞர் வழியில் பெரியாரின் கொள்கைகளைச் சேர்த்தவர் கலைஞர். தான் தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கியவர் கலைஞர். பெரியார் நினைவு சமத்துவபுரம் இந்தியா வேறு எந்த முதல்வரும் எண்ணிக்கூடப் பார்க்காத ஒன்று.

இதையும் படிங்க..டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!

Thirumavalavan request to cm mk stalin about karuanidhi birthday

எல்லோரையும் சேர்ந்து வாழவைக்க வேண்டும் என்ற சிந்தனை பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனை. ஆகும். மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவிலையே முதன் முதலில் முழங்கிய தலைவர் கலைஞர். கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாளாக அறிவிப்பதாகச் சொன்னீர்கள். தலைவர் கலைஞர் மாநிலத்தைக் கடந்தவர். எனவே முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை மாநில சுயாட்சி நாளாக அறிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

Follow Us:
Download App:
  • android
  • ios