சூடுபிடிக்கும் பைக் சுற்றுலா பிசினஸ்; 10 வெளிநாட்டு பைக்குகளை இறக்குமதி செய்த அஜித் - அதன் விலை இத்தனை கோடியா?
நடிகர் அஜித், தன்னுடைய ஏகே மோட்டோ ரைடு என்கிற பிசினஸிற்காக வெளிநாட்டில் இருந்து 10 விலையுயர்ந்த பைக்குகளை இறக்குமதி செய்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், அடுத்ததாக விடாமுயற்சி என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த உள்ளனர்.
இப்படி சினிமாவில் பிசியாக இருந்தாலும் நடிகர் அஜித் பைக் ரைடிங் மீது தீரா காதல் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் இல்லா நாட்களில் பெரும்பாலும் பைக் ட்ரிப் சென்றுவிடுவார். அந்த அளவுக்கு பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், கடந்தாண்டு முதல் உலக சுற்றுலாவை தொடங்கி உள்ளார். இந்த உலக சுற்றுலாவின் முதல் பகுதியாக இந்தியா முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அஜித், அடுத்ததாக நேபால், பூட்டான் உள்ளிட்ட நாடுகளிலும் பைக் ட்ரிப் செய்தார்.
இதையும் படியுங்கள்... திருப்பதி கோவில் வளாகத்தில் கீர்த்தி சனோனை திடீரென கட்டிபிடித்து கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனர்- வைரல் வீடியோ
தற்போது விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்க உள்ளதால், தனது உலக பைக் சுற்றுலாவுக்கு சிறிது ரெஸ்ட் விட்டுள்ள அஜித், அடுத்தக்கட்ட பைக் பயணத்தை வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளார். இதனிடையே இந்த பைக் சுற்றுலாவை மையமாக வைத்தே புது பிசினஸ் ஒன்றையும் அண்மையில் தொடங்கினார் அஜித். அந்த பிசினஸிற்கு ஏகே மோட்டோ ரைடு என பெயரிட்டுள்ளதாக அறிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் ஏகே.
தன்னைப் போலவே பைக்கில் உலக சுற்றுலா செல்ல விரும்பும் ரைடர்களுக்கு உதவும் வண்ணம் இந்த பைக் சுற்றுலா நிறுவனம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னுடைய ஏகே மோட்டோ ரைடு நிறுவனத்திற்காக தற்போது 10 பைக்குகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளாராம் அஜித். அந்த பைக் ஒவ்வொன்றின் விலை ரூ.1 கோடியே 25 லட்சம் இருக்குமாம். இந்த பைக்கில் சுற்றுலா செல்பவர்களிடம் ரூ.8 லட்சம் வரை வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் அஜித். இதைப்பார்க்கும்போது அஜித் பிசினஸின் செம்ம பிசியாகிவிட்டார் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... கீர்த்தி சனோனை அருகில் வைத்துக்கொண்டே திருமணம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்