Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்க - நயினார் நாகேந்திரன்!

மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூடியுள்ளார்

Nainar nagendran question about milk price hike and lauds pm modi
Author
First Published Jun 7, 2023, 1:04 PM IST

தமிழகத்தில் பால் விலையை  குறைத்தனர். இப்போது, உயர்த்தி விட்டனர். அதை பற்று யாரும் கேட்பதில்லை. சமையல் எரிவாயு விலை உயர்வை பற்றி மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டு காலத்தில் இதுவரை 42  கோடி பேருக்கு மேலாக எல்லோருக்கும் வங்கிகளில் பணம் போடும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

பாரத பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு கூரை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார ரீதியில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் உலக அளவில் இந்திய பொருளாதாரம் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்தது விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? இதன் மதிப்பு இத்தனை கோடியா? ராமதாஸ்..!

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரிகளை மத்திய அரசு அதிகமாக கொடுத்தது. தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லும் ஒரே தலைவராக பாரத பிரதமர் மோடி இருக்கிறார்.” என புகழாரம் சூடினார்.

தமிழகத்தில் பால் விலையை  குறைத்தனர். இப்போது, உயர்த்தி விட்டனர். அதை பற்று யாரும் கேட்பதில்லை. சமையல் எரிவாயு விலை உயர்வை பற்றி மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இலவசமாக கேஸ் கொடுத்திருக்கிறார்கள் அதைப் பற்றி பேச மாட்டார்கள் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios