Published : Nov 21, 2023, 07:12 AM ISTUpdated : Nov 21, 2023, 10:10 PM IST

Tamil News Live Updates: கொரோனா தடுப்பூசியால் மரணங்களா? ஐசிஎம்ஆர் பரபரப்பு தகவல்.!

சுருக்கம்

இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. வாழ்க்கை முறை சூழல்கள், குடும்ப உடல்நல வரலாறு போன்றவையே திடீர் மரணங்களுக்கு காரணம் என  ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது. 

 Tamil News Live Updates: கொரோனா தடுப்பூசியால் மரணங்களா? ஐசிஎம்ஆர் பரபரப்பு தகவல்.!

10:10 PM (IST) Nov 21

எடுத்தது என்னவோ 5 படம் தான்.. குருநாதரையே சொத்து மதிப்பில் மிஞ்சிய அட்லீ.. எவ்வளவு தெரியுமா?

திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அட்லீ தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கிறார். இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

09:11 PM (IST) Nov 21

Bill Gates : சாக்கடைக்குள் இறங்கிய பில் கேட்ஸ்.. உண்மையான வீடியோ தான்.. ஏன்? எதற்கு தெரியுமா?

பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் பிரஸ்ஸல்ஸில் உள்ள துர்நாற்றம் வீசும் சாக்கடைக்குள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அது ஏன் என்பது இங்கே பார்க்கலாம்.

07:28 PM (IST) Nov 21

குறைந்த விலையில் துபாயை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி துபாய்க்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்த கட்டணத்தில், துபாயை சுற்றி பார்க்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

06:48 PM (IST) Nov 21

வெறும் ரூ.55 ஆயிரம் மட்டுமே.. இந்தியாவின் விலை குறைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இவ்வளவு வசதிகளா!

இ-ஸ்ப்ரின்ட்டோ புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:15 PM (IST) Nov 21

யோகிபாபுவின் ‘குய்கோ’ - டிரைலர் இதோ

யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள குய்கோ திரைப்படம் வருகிற நவம்பர் 24-ந் தேதி விக்ரம், சந்தானம் படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.

05:52 PM (IST) Nov 21

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. வானிலை மையம் அப்டேட் - எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

05:42 PM (IST) Nov 21

கேப்டன் மில்லர் vs லால் சலாம் மோதலின் பின்னணி

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படமும் பொங்கலுக்கு மோதுவதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

05:32 PM (IST) Nov 21

விவசாயத்தினை பாதுகாப்பது அனைவரின் கடமை: உதயநிதி ஸ்டாலின்!

விவசாயத்தினை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

05:31 PM (IST) Nov 21

பாஜக MLA மருமகனை தூக்கிய எடப்பாடி பழனிச்சாமி.. கொங்கு மண்டலத்தில் திடீர் ட்விஸ்ட்.. யாருப்பா அவரு.?

பாஜக மாநில ஓபிசி அணி துணை தலைவர் ஆற்றல் அசோக்குமார் அதிமுகவில் இணைந்தார். இது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

05:09 PM (IST) Nov 21

ரூ.1 லட்சத்தில் உள்ள சிறந்த பைக்குகள்.. சூப்பர் மைலேஜ்.. விலையும் ரொம்ப கம்மிதான்..

ரூ.1 லட்சத்துக்குள் உள்ள சிறந்த மைலேஜ் தரும் பைக்குகளும், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

05:08 PM (IST) Nov 21

உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிகளை பரபரப்பாக்க வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

உத்தரகாண்ட் சில்க்யாராவில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்த செய்திகளைப் பரபரப்பாக்க வேண்டாம் என தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

 

04:47 PM (IST) Nov 21

26/11 மும்பை தீவிரவாத தாக்குதக்: லக்‌ஷர்-இ-தொய்பாவை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த இஸ்ரேல்!

மும்பை தீவிரவாத தாக்குதலில் 15ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, லக்‌ஷர்-இ-தொய்பாவை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் பட்டியலிட்டுள்ளது

 

04:09 PM (IST) Nov 21

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்: ராஜஸ்தான் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

ராஜஸ்தான் மாநிலத் தேர்தலையொட்டி பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது

 

03:57 PM (IST) Nov 21

சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த 'ஏ பிளஸ் பிளஸ்' தரம்.. குவியும் பாராட்டுக்கள்..!

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் 'ஏ பிளஸ் பிளஸ்' தரத்தை வழங்கி உள்ளது.

03:31 PM (IST) Nov 21

டீப் ஃபேக்குகளுக்கு எதிராக புதிய சட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

டீப் ஃபேக்குகளுக்கு எதிராக தேவைப்பட்டால் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

 

03:31 PM (IST) Nov 21

சென்னையில் மத்திய அரசு வேலை: 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!

சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

 

03:28 PM (IST) Nov 21

நிதியுதவி சட்டங்களை மீறிய பைஜுஸ்.. ரூ.9000 கோடி செலுத்த வேண்டும்.. அமலாக்கத்துறை போட்ட கிடுக்கிப்பிடி

வெளிநாட்டு நிதியுதவி சட்டங்களை மீறியதற்காக ரூ.9,000 கோடி செலுத்துமாறு பைஜூஸ் நிறுவனத்திடம் அமலாக்க இயக்குனரகம் கோரியுள்ளது.

03:21 PM (IST) Nov 21

ஜவஹர்லால் நேருவால் ஒதுக்கிவைக்கப்பட்ட பழங்குடியின பெண் மரணம்.. யார் இந்த புத்னி மேஜான்.?

ஜவஹர்லால் நேருவால் வாழ்நாள் முழுவதும் ஒதுக்கிவைக்கப்பட்ட பழங்குடியின பெண் மரணம் அடைந்துள்ளார்.

01:50 PM (IST) Nov 21

கலாச்சார சீர்கேட்டின் உச்சத்தில் சென்னை.. நேரம் கடந்து பப் திறந்து வைத்தது யார் குற்றம்? நாராயணன் திருப்பதி!

பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர்களை திருத்த முயல வேண்டுமே தவிர, அழிக்க முயல்வது ஆபத்து என்பதை ஊடகங்கள் உணர வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

01:26 PM (IST) Nov 21

ஆர்ஆர்டிஎஸ் திட்ட நிதி: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

ஆர்ஆர்டிஎஸ் திட்டத்திற்கு நிதியை வழங்காத டெல்லி அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது

 

12:21 PM (IST) Nov 21

2024 பட்ஜெட் வாக்கெடுப்பை சீர்குலைக்க முயற்சி: அல்பேனிய நாடாளுமன்றத்தில் தீ வைத்த எம்.பி.க்கள்!

2024 பட்ஜெட் மீதான வாக்கெடுப்பை சீர்குலைக்கும் முயற்சியாக அல்பேனிய நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

11:42 AM (IST) Nov 21

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை அமைப்பதற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

11:42 AM (IST) Nov 21

ஆண்டுக்கு 10 சதவீத உயர்வுடன் மாதம் ரூ.70,000இல் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

 

11:41 AM (IST) Nov 21

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: பிரதமர் மோடி நேற்றிரவு ஆலோசனை!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து தொடர்பாக பிரதமர் மோடி நேற்றிரவு முக்கிய ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்

 

10:56 AM (IST) Nov 21

நடிகை த்ரிஷா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.. நடிகர் மன்சூர் அலி கான்

நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும் என நடிகர் நடிகர் மன்சூர் அலி கான் கூறியுள்ளார். 

10:50 AM (IST) Nov 21

கொரோனா தடுப்பூசியால் மரணங்களா? ஐசிஎம்ஆர் பரபரப்பு தகவல்

இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. வாழ்க்கை முறை சூழல்கள், குடும்ப உடல்நல வரலாறு போன்றவையே திடீர் மரணங்களுக்கு காரணம் என  ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது. 

10:45 AM (IST) Nov 21

சாலை விபத்து.. காவலர் இளங்கோ உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பனப்பாக்கம் சாலையில் நேற்று இரவு நடந்த பைக் விபத்தில், காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இளங்கோ உயிரிழந்தார். 

10:42 AM (IST) Nov 21

விஷயம் குடிச்சு செத்தாலும் சாவமே தவிர! இபிஎஸ் பக்கம் செல்ல மாட்டோம்! OPS-க்காக குரல் கொடுக்கும் மருது அழகுராஜ்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு என மருது அழகுராஜ் ஆவேசமாக கூறியுள்ளார். 

10:30 AM (IST) Nov 21

பன்னி கணக்கையே 10 விதமா எழுதுனாரு... பருத்திவீரன் படத்தில் அமீர் செய்த திருட்டு வேலைகளை தோலுரித்த பிரபலம்

பருத்திவீரன் பட ஷூட்டிங்கின் போது இயக்குனர் அமீர் செய்த திருட்டு வேலைகளை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.

09:58 AM (IST) Nov 21

Today Gold Rate in Chennai : மீண்டும் எகிறி தங்கம் விலை.. இன்று எவ்வளவு உயர்ந்தது கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

08:56 AM (IST) Nov 21

சுடுகாட்டில் முனகல் சத்தம்! கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்!இறுதியில் நடந்தது என்ன?

சுடுகாட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

08:42 AM (IST) Nov 21

கோலாகலமாக தொடங்கியது கோவா சர்வதேச திரைப்பட விழா

கோவாவில் 54வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், அதில் திரையிட தேர்வாகி உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.

08:14 AM (IST) Nov 21

தெலங்கானாவில் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு

தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபடுமாறு  கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

08:01 AM (IST) Nov 21

தீபத்துக்கு தி.மலைக்கு போறீங்களா? கூட்ட நெரிசல் இல்லாமல் குளு குளுனு செல்ல போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு!

திருவண்ணாமலை தீபத் திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளார். 

07:13 AM (IST) Nov 21

Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொளத்தூர்,  கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:12 AM (IST) Nov 21

AMMK Vs AIADMK : அமமுகவின் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!

அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான உசிலம்பட்டி மகேந்திரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


More Trending News