பொண்டாட்டியை பழிவாங்க தான் பொங்கல் ரேஸில் குதித்தாரா தனுஷ்? கேப்டன் மில்லர் vs லால் சலாம் மோதலின் பின்னணி
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படமும் பொங்கலுக்கு மோதுவதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
Rajini, AIshwarya, Dhanush
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்களும் உள்ளன. திருமணமாகி 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்தாண்டு தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மகன்களுக்காக இருவரும் இதுவரை விவாகரத்து பெறாவிட்டாலும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
Lal Salaam
தனுஷ் உடனான பிரிவுக்கு பின்னர் ஐஸ்வர்யா சினிமாவில் மீண்டும் பிசியாக தொடங்கினார். அவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் திரைப்படம் உருவாகி உள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
pongal release movies
லால் சலாம் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறது. லால் சலாம் படத்துக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சுந்தர் சி-யின் அரண்மனை 3 ஆகிய படங்களும் உள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
dhanush, Aishwarya
இந்த போட்டியில் இறுதியாக இணைந்த திரைப்படம் தான் தனுஷின் கேப்டன் மில்லர். இப்படம் முதலில் டிசம்பர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் முடிக்க தாமதம் ஆனதால் பொங்கலுக்கு தள்ளிவைத்தனர். தன்னை பிரிந்து வாழும் ஐஸ்வர்யாவை பழிவாங்க தான் தனுஷ் அவரது படத்துக்கு போட்டியாக கேப்டன் மில்லர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதாக சோசியல் மீடியாவில் பேச்சு அடிபட்டது.
Captain Miller to clash with Lal Salaam
ஆனால் உண்மையில் கேப்டன் மில்லர் வேண்டுமென்றே பொங்கலுக்கு தள்ளிவைக்கப்படவில்லையாம். நடிகர் தனுஷும் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால், முதலில் கேப்டன் மில்லர் படத்தை ஜனவரி 26-ந் தேதி வெளியிடலாம் என்கிற ஐடியா தான் இருந்ததாம். ஆனால் அன்றைய தினத்தில் ஏற்கனவே விக்ரமின் தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதுமட்டுமின்றி கேப்டன் மில்லரை போல் தங்கலானும் வரலாற்றும் கதையம்சம் கொண்ட படம் என்பதால் அவற்றை ஒன்றாக ரிலீஸ் செய்தால் குழப்பம் ஏற்படும் என்பதன் காரணமாகவே கேப்டன் மில்லரை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... திரிஷா விவகாரத்தில் மிகப்பெரிய தப்பு செஞ்சிட்டீங்கடா; தமிழ்நாடே என் பக்கம் இருக்கு- கொந்தளித்த மன்சூர் அலிகான்