AMMK Vs AIADMK : அமமுகவின் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!
அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான உசிலம்பட்டி மகேந்திரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அமமுக மற்றும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனால் பல்வேறு தொகுதிகயில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.
அதுபோன்று நாடாளுமன்ற தேர்தலில் நடந்து விடக்கூடாது என்பதால் தேர்தலுக்குள் அமமுக கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அமமுகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை தூக்கும் வேலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், அமமுக மதுரை மாநகர் புறநகர் மாவட்ட செயலாளராகவும், டிடிவி. தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்த மகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமமுகவில் இருந்து அதிமுகவில் கொண்டு வர முக்கிய பங்காற்றியவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
இதையும் படிங்க;- நாடாளுமன்ற தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் அதிமுக... மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த எடப்பாடி
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர் உசிலம்பட்டி மகேந்திரன். 2006 சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவால் டிடிவி. தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார். இதனையடுத்து மகேந்திரனுக்கு அமமுகவின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், அமமுக மதுரை மாநகர் புறநகர் மாவட்ட செயலாளராகவும், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.