பன்னி கணக்கையே 10 விதமா எழுதுனாரு... பருத்திவீரன் படத்தில் அமீர் செய்த திருட்டு வேலைகளை தோலுரித்த பிரபலம்
பருத்திவீரன் பட ஷூட்டிங்கின் போது இயக்குனர் அமீர் செய்த திருட்டு வேலைகளை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.
paruthiveeran
அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். அப்படம் ஹிட் ஆனாலும் அதன் ரிலீசுக்கு பின்னர் இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கார்த்தி ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
GnanavelRaja
அதன்படி அவர் கூறியதாவது : “அமீர், மெளனம் பேசியதே முடித்ததும் தன் சொந்த தயாரிப்பில் ராம் என்கிற படத்தை எடுத்தார். அப்படத்தால் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அந்த கடனை கட்ட முடியாமல் தவித்து வந்தார். அப்போது அவரிடம் நான் கடனை கட்டிவிடுகிறேன், அதற்கு நீங்கள் எனக்கு படம் பண்ணி அந்த பணத்தை செட்டில் செய்துவிடுமாறு கூறினேன். அப்படி உருவானது தான் பருத்திவீரன்.
paruthiveeran movie Issue
பருத்திவீரன் படத்தின் பர்ஸ்ட் காப்பியை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. ஆனால் அமீர் இறுதியாக என்னிடம் செட்டில் செய்தது ரூ.4 கோடியே 80 லட்சம். 6 மாதத்தில் படத்தை முடிக்கிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருஷம் எடுத்துக்கொண்டார். என் மீதும் சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்தது அமீர் தான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
paruthiveeran director Ameer
அமீர் மனதில் பாரதிராஜானு நெனப்பு, அவருக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாது. என்றைக்குமே அவரால் யாருக்குமே பிரயோஜனம் இல்லை. பருத்திவீரன் படம் முடித்து அமீரிடம் தயாரிப்பாளர் கவுன்சில் கணக்கு கேட்டாங்க. அண்ணன் பன்னிகளை வச்சே 10 விதமா கணக்கு கொடுத்தாரு. பருத்திவீரன் படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் பன்னிகள் இடம்பெறும் காட்சிகளை பயன்படுத்தி இருப்பார். அந்த காட்சியில் 35 பன்றிகள் தான் இருக்கும். ஆனால் அவர் 250 பன்னிகளை பயன்படுத்தியதாக கணக்கு கொடுத்திருந்தார்.
Director Ameer
அதில் 100 பன்னிகள் பிரேமில் தெரியவில்லை என்றும், 70 பன்னிகள் ஷூட்டிங்கின் போது இறந்துவிட்டதாகவும் கணக்கு காட்டினார். அமீருக்கு இருக்கும் திறமைக்கு அவர் ஹாலிவுட் வரை சென்று படம் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இங்கயே திருட வேண்டும் என நினைத்து சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் என்னிடம் மட்டுமில்லை அன்பழகன் மற்றும் சந்தனத்தேவன் பட தயாரிப்பாளர் ஆகியோரிடமும் இருந்து திருடி இருக்கிறார்” என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார் ஞானவேல்ராஜா.
இதையும் படியுங்கள்... பிரம்மாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா... கோலிவுட் முதல் பாலிவுட் வரை இத்தனை பிரபலங்களுக்கு அழைப்பா?