கோலாகலமாக தொடங்கியது கோவா சர்வதேச திரைப்பட விழா... விடுதலை உள்பட திரையிட தேர்வான தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
கோவாவில் 54வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், அதில் திரையிட தேர்வாகி உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.
Goa Film Festival
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 54-வது சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. நேற்று தொடங்கிய இந்த விழா வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 270-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் சர்வதேச பிரிவில் மட்டும் சுமார் 198 திரைப்படங்கள் திரையிட தேர்வாகி இருக்கின்றன.
viduthalai
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 18 சர்வதேச திரைப்படங்கள் கூடுதலாக திரையிட தேர்வாகி உள்ளன. அதேபோல் இந்தியன் பனோரமா பிரிவில் மொத்தம் 25 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. இதில் விடுதலை, காதல் என்பது பொதுவுடைமை, நீள நிற சூரியன் ஆகிய தமிழ்படங்களும் இடம்பெற்று உள்ளன. இதில் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். அதேபோல் காதல் என்பது பொதுவுடைமை படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனும், நீள நிற சூரியன் திரைப்படத்தை சம்யுக்தா விஜயனும் இயக்கி உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ponniyin selvan
இதுதவிர மெயின்ஸ்டிரீம் சினிமா பிரிவில் மொத்தம் 5 திரைப்படங்கள் திரையிட தேர்வாகி இருக்கின்றன. இதில் மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட சரித்திர திரைப்படமான பொன்னியின் செல்வனும் ஒன்று. இதுதவிர நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய சுதிப்தோ சென்னின் தி கேரளா ஸ்டோரி திரைப்படமும் இந்த பிரிவில் திரையிட தேர்வாகி இருக்கிறது.
IFFi
அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... நான் அவரை பார்த்தே ஆகணும்.. தங்கலான் டீசர் பார்த்து மிரண்டுபோன ஹீரோ - பாலிவுட் உலகில் களமிறங்கும் பா. ரஞ்சித்!