நான் அவரை பார்த்தே ஆகணும்.. தங்கலான் டீசர் பார்த்து மிரண்டுபோன ஹீரோ - பாலிவுட் உலகில் களமிறங்கும் பா. ரஞ்சித்!
Pa Ranjith Bollywood Entry : தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாதை அமைத்து பயணித்து வரும் ஒரு இயக்குனர் தான் பா. ரஞ்சித், கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிவர் அவர்.
Kaala Movie
ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக தனது குரலை, தன் எல்லா திரைப்படத்திலும் பதிவு செய்யும் ஒரு சிறப்பான இயக்குனர் அவர் என்றால் அது மிகையல்ல. இதுவரை வெகு சில படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றபோது, மக்களில் பெரிதும் விரும்பப்படும் ஒரு நல்ல இயக்குனராக திகழ்ந்து வருகின்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ரஞ்சித்தின் கபாலி மற்றும் காலா ஆகிய இரு படங்களும் வெற்றிப்படங்களாக மாறியது.
Thangalaan
இந்நிலையில் இப்பொது முதல் முறையாக பிரபல நடிகர் விக்ரம் அவர்களை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ள நிலையில் அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார் விக்ரம். இந்த படம் நிச்சயம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்கமுடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.
Pa Ranjith
இந்த சூழலில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த தகவலின்படி, ஸ்டுடியோ கிறீன் நிறுவனம் ஒரு பாலிவுட் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அதற்காக ஒரு டாப் பாலிவுட் ஹீரோவிடம் சென்றபோது, அவரிடம் தங்கலான் பட டீசரை கட்டியதாகவும் கூறினார். அதை கண்டு மிரண்டுபோன அந்த ஹீரோ, உடனே ரஞ்சித் அவர்களை பார்க்கவேண்டும் என்று ஆசை கொண்டதாகவும், அவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். ஆகவே விரைவில் ரஞ்சித் பாலிவுட் உலகில் களமிறங்கவுள்ளது உறுதியாகியுள்ளது.