பிராப்சிம்ரன் சிங், அதர்வா டைடு அதிரடி ஆட்டம் – பஞ்சாப் கிங்ஸ் 214 ரன்கள் குவிப்பு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்துள்ளது.

Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்து 214 ரன்கள் குவித்தது. பிராப்சிம்ரன் சிங் மற்றும் அதர்வா டைடு இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
இதில், இருவரும் அதிரடியாக விளையாடவே பஞ்சாப் கிங்ஸ் 6 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்தது. கடைசியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் குவித்தது. இதில், அதர்வா டைடு 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
ரிலீ ரோஸோவ் 49 ரன்களில் வெளியேற ஷஷாங்க் சிங் 2 ரன்னில் ரன் அவுட்டானார். அஷுதோஷ் சர்மா 2 ரன்னில் வெளியேறினார். கடைசியில் கேப்டன் ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 32 ரன்கள் எடுத்தார்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 214 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நடராஜன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் மற்றும் விஜயகாந்த் வியாஷ்காந்த் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
Sunrisers Hyderabad vs Punjab Kings, 69th Match
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 13 போட்டிகளில் 5 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறும். இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறும்.