26/11 மும்பை தீவிரவாத தாக்குதக்: லக்ஷர்-இ-தொய்பாவை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த இஸ்ரேல்!
மும்பை தீவிரவாத தாக்குதலில் 15ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, லக்ஷர்-இ-தொய்பாவை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் பட்டியலிட்டுள்ளது
இஸ்ரேல் நாட்டவர்கள் பலர் உட்பட 160 பேர் கொல்லப்பட்ட 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற 26/11 எனப்படும் மும்பை தீவிரவாத தாக்குதலில் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு லஷ்கர்-இ-தொய்பாவை 'பயங்கரவாத அமைப்பாக' இஸ்ரேல் பட்டியலிட்டுள்ளது.
“"மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 15 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், இஸ்ரேல் அரசு லஷ்கர்-இ-தொய்பாவை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டுள்ளது.”என்று டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்திய அரசாங்கத்தால் அவ்வாறு செய்யுமாறு கோரப்படவில்லை என்றாலும், இஸ்ரேல் அரசு தேவையான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவை இஸ்ரேலிய சட்டவிரோத பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்ததன் விளைவாக தேவையான அனைத்து ஒழுங்குமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளது.” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்: ராஜஸ்தான் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!
“லஷ்கர்-இ-தொய்பா ஒரு கொடிய மற்றும் கண்டிக்கத்தக்க பயங்கரவாத அமைப்பாகும். இது நூற்றுக்கணக்கான இந்திய குடிமக்கள் மற்றும் பிறரின் கொலைக்கு காரணமானது. நவம்பர் 26, 2008 அன்று அதன் கொடூரமான நடவடிக்கைகள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்களில் இன்னும் எதிரொலிக்கிறது.” என இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்லது.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தெற்கு மும்பை பகுதிகளுக்குள் நுழைந்த 10 பாகிஸ்தானை சேர்ந்த லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், சபாத் ஹவுஸ், யூத மையம், நரிமன் ஹவுஸ், தாஜ் ஹோட்டல், சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 18 பேர், இஸ்ரேலியர்கள் பல உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.