சென்னையில் மத்திய அரசு வேலை: 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!
சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குனரகத்தின் சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்
** ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீஷியன், ஆய்வக டெக்னீஷியன், சுகாதார ஆய்வாளர், நூலக கிளார்க், சமையலர், சமையல் உதவியாளர், டெய்லர், அருங்காட்சியக உதவியாளர், அக்கவுண்டண்ட் என்பன உள்ளிட்ட 64 வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
** கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரையிலான பணிகள் உள்ளன
** வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை பணியிடங்களை பொறுத்து மாறுபடுகிறது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி, தளர்வு உள்ளது.
** தேர்வு முறை : கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும். மும்பை, பெங்களூர், சென்னை, லக்னோ, ராஞ்சி, சண்டிகார், கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்
** விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
** எப்படி விண்ணப்பிப்பது: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த முடியும். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
** ஊதிய விவரம்: அந்தந்த படிநிலைகளை பொறுத்து அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும். ரூ.18,000 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 10 சதவீத உயர்வுடன் மாதம் ரூ.70,000இல் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!
முக்கிய தேதிகள்
** ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேதி: 10-11-2023 முதல் 30-11-2023 (கடைசி தேதியில் இரவு 11.45க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்)
** ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 01-12-2023
** தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுக்கான உத்தேச தேதி: 2023 டிசம்பர் முதல் வாரம்
** கணினி தேர்வுக்கான உத்தேச தேதி: 2023 டிசம்பர் இரண்டாவது வாரம்
** தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்படும் உத்தேச தேதி: 2023 டிசம்பர் மூன்றாவது வாரம்
** வெற்றி பெற்றவர்களுக்கான ஆவண சரிபார்ப்புக்கான உத்தேச தேதி: 2023 டிசம்பர் நான்காவது வாரம்
** பணி தொடர்பான கூடுதல் விவரம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இங்கு க்ளிக் செய்யுங்கள்
** உதவி எண்: 8009653655
** உதவி மின்னஞ்சல்: hlldghs.helpdesk@gmail.com