ஆண்டுக்கு 10 சதவீத உயர்வுடன் மாதம் ரூ.70,000இல் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் அறிவியல் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்
** பணியின் பெயர்: அறிவியல் உதவியாளர் (Scientific Assistant)
** ஒப்பந்த அடிப்படையிலான பணி. முதலில் ஓராண்டுக்கும், பின்னர், செயல்பாடு மற்றும் திட்டத்தின் தேவையை பொறுத்து நீட்டிக்கப்படும்.
** காலிப்பணியிடங்கள் - 07
** ஊதியம்: மாதம் ரூ.70,000 (ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்வு)
** பணியிடம்: டெல்லி, சண்டிகர், சென்னை, கொல்கத்தா, மும்பை, காந்திநகர்
** வயது வரம்பு: விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
** கல்வித்தகுதி: எம்டெக், எம்இ, எம்எஸ்சி, எம்சிஏ ஆகிய படிப்புகளை டிஜிட்டல் தடய அறிவியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது சைபர் செக்யூரிட்டி அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு நிகரான பிரிவில் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஇ, பிடெக், பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கூறிய படிப்புகளை படித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
** விண்ணப்பிக்க கடைசி தேதி - 24, நவம்பர் 2023. அன்றைய தினம் மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
** எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.nfsu.ac.in/career என்ற இணையதளத்துக்கு சென்று ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
** பணி தொடர்பான கூடுதல் விவரம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண இங்கு க்ளிக் செய்யுங்கள்