யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள குய்கோ திரைப்படம் வருகிற நவம்பர் 24-ந் தேதி விக்ரம், சந்தானம் படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் யோகிபாபு. இவர் ஹீரோவாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி ஆகிய படங்கள் அவரின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்காட்டி இருந்தது. இதையடுத்து அண்மையில் இவர் ஹீரோவாக நடித்திருந்த லக்கி மேன் என்கிற காமெடி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் ஒரு காமெடி கதையம்சம் கொண்ட படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தி இருக்கிறார் யோகி பாபு. அப்படத்தின் பெயர் குய்கோ. இப்படத்தில் நடிகர் விக்ராந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் குய்கோ படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Kuiko - Official Trailer | Vidaarth | Yogi Babu | Anthony Daasan | Kevin Miranda | T.Arul Chezhian

குய்கோ திரைப்படம் வருகிற நவம்பர் 24-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தை வெளியிடுகிறதாம். அதுவும் அன்றைய தினம் சந்தானத்தின் 80ஸ் பில்டப், விக்ரமின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக யோகிபாபுவின் குய்கோ ரிலீஸ் ஆக உள்ளது.

குய்கோ திரைப்படத்தை அருள் செழியன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஆண்டனி தாஸன் இசையமைத்து உள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் வினோதினி, இளவரசு, குக் வித் கோமாளி பிரபலம் முத்துக்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பொண்டாட்டியை பழிவாங்க தான் பொங்கல் ரேஸில் குதித்தாரா தனுஷ்? கேப்டன் மில்லர் vs லால் சலாம் மோதலின் பின்னணி