சுடுகாட்டில் முனகல் சத்தம்! கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்!இறுதியில் நடந்தது என்ன?
சுடுகாட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் கோடியா கிராமத்தை சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேபால் சிங்கின் மனைவிக்கும், அதேபகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இந்நிலையில், அன்றைய தினமே குழந்தை மற்றும் கணவர் தூங்கிய நிலையில் மனைவி யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலனை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், இருவரும் அந்த கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். கணவர் திடீரென எழுந்து பார்த்த போது மனைவி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது மனைவியை தேடி சுடுகாட்டின் வழியாக சென்று கொண்டிருந்த போது முனல் சத்தம் கேட்டதை அங்கு சென்று பார்த்த போது கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையும் படிங்க;- உல்லாசத்தின் ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான கள்ளக்காதலன்.. வாயில் மதுவை ஊற்றி கொடூர கொலை.! சிக்கிய காம தாய்!
பின்னர் அங்கு பிணத்தில் எரிந்து கொண்டிருந்த தீக் கட்டை ஒன்றை எடுத்து, உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடிகள் மீது வீசியுள்ளார். இதனையடுத்து அரைகுறை ஆடையுடன் அலறியடித்துக்கொண்டு கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டான். ஆனால் நேபால் சிங்கின் மனைவி புடவையில் தீப்பற்றி எரிந்ததால் தீ காயங்களுடன் துடித்த நிலையில் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதையும் படிங்க;- கணவரை மாடியில் வைத்துக்கொண்டே மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
மறுநாள் காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீ காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இச்சம்பவம் தொடர்பாக நேபால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.