போலி கையெழுத்து போட்டு பெற்றோரின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடு சென்ற மகன்!
முதியவர் மணிக்கு வயோதிகம் காரணமாக கண் பார்வை மங்கலாக இருக்கிறது. அவரது மனைவிக்கும் உடல்நலப் பிரச்சினை இருக்கிறது. இந்நிலையில், மருத்துவச் செலவுக்காகப் பணம் எடுக்கவேண்டி இருந்தால் தங்கள் மகளுடன் போஸ்ட் ஆபீஸ் சென்றுள்ளனர்.
ஏழைப் பெற்றோர் சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை அவர்களின் மகனே சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி இருக்கிறார். சுயநலம் பிடித்த மகன் குறித்து வயதான பெற்றோர் காவல்துறையில் புகார் கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. கொல்லம் பட்டறை அமைத்து தொழில் நடந்தி வந்த இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரும் இவரது மனைவியும் மருத்துவச் செலவுகளுக்காக பல ஆண்டுகளாக போஸ்ட் ஆபீசில் சிறுக சிறுக ரூ.5 லட்சம் சேமித்து வைத்திருந்தார்கள்.
முதியவர் மணிக்கு வயோதிகம் காரணமாக கண் பார்வை மங்கலாக இருக்கிறது. அவரது மனைவிக்கும் உடல்நலப் பிரச்சினை இருக்கிறது. இந்நிலையில், மருத்துவச் செலவுக்காகப் பணம் எடுக்கவேண்டி இருந்தால் தங்கள் மகளுடன் போஸ்ட் ஆபீஸ் சென்றுள்ளனர்.
பள்ளி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு! நெகிழ்ச்சியில் ஆசிரியர் ஜேம்ஸ்!
அப்போது அவர்களின் மகன் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. பெற்றோரைப் போல கையெழுத்து போட்டு முழு தொகையையும் எடுத்த மணியின் மகன் தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
வயதான பெற்றோருக்கு மகள்களும் உதவி செய்ய முடியாதபடி வசதியற்ற சூழ்நிலையில் உள்ளனர். மகனின் இந்தத் துரோகத்தால் நிர்க்கதியாக நிற்கும் பெற்றோர் உதவி கோரி காவல்நிலையத்தை நாடியுள்ளனர். தங்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்துச் சென்ற மகனிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என மனு அளித்துள்ளனர்.
லண்டனில் வாளுடன் வந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய இளைஞர்! போலீசார் உள்பட 5 பேர் படுகாயம்!