கல்லூரிக்கு வர விருப்பம் இல்லை; கோவையில் பொறியியல் மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை - மாணவர்கள் போராட்டம்

கருமத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

first year engineering college student commit suicide at hostel in coimbatore vel

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் உஷா தம்பதியினரின்  பாதுகாப்பில் வளர்ந்து வந்தவர் கல்லூரி மாணவி பவித்ரா. இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று கல்லூரி தேர்வில் மதிப்பெண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு சில பாடங்களில் பவித்ரா மதிப்பெண் குறைவாக எடுத்ததாகவும், இதனால் மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று காலை தன்னுடன் தங்கியுள்ள சக மாணவிகளிடம் கல்லூரிக்கு வர விருப்பம் இல்லை எனக் கூறி விடுப்பு விண்ணப்பத்தை  கொடுத்து அனுப்பி உள்ளார். மாணவி பவித்ரா அனுமதி பெறாமல் விடுப்பு விண்ணத்தை அனுப்பியது குறித்து விடுதி காப்பாளரிடம், கல்லூரி நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். இதனையடுத்து விடுதி காப்பாளர் மாணவி பவித்ராவின் அறைக்கு சென்று பார்த்த பொழுது  அவர், தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார். 

புதையல் எனக்கூறி பானையில் மண்ணை வைத்து ரூ.7.5 லட்சம் மோசடி; சேலத்தில் போலி சாமியார்கள் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி காப்பாளர், கல்லூரி நிர்வாகம் மூலம்  கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Viral Video: மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதை ஆசாமி வெறியாட்டம்; உயிர் பயத்தில் மருத்துவர், செவிலியர்கள்

மாணவியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாணவி பவித்ராவின் தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகத்தினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மாணவி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படும் நிலையில் அவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios