கணவரை மாடியில் வைத்துக்கொண்டே மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
நண்பருடன் மனைவி உல்லாசமாக இருந்ததை கண்ட கணவர் மனவேதனையில் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
illegal love
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஏரிக்கரையை சேர்ந்தவர் ராஜ்குமார் (32). மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (28). ராஜ்குமாரின் நெருங்கிய நண்பர் ஹேம்நாத் (30). இவர் ராஜ்குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது கலைவாணிக்கும் ஹேம்நாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. ராஜ்குமார் இல்லாத நேரத்தில் ஹேம்நாத் அடிக்கடி வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தீபாவளியன்று மாடியில் படுத்து தூங்கப்போவதாக கூறிவிட்டு ராஜ்குமார் சென்றுள்ளார். ராஜ்குமார் மீண்டும் கீழே வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.
இதையும் படிங்க;- ஹவுஸ் ஓனர் மனைவியை கரெக்ட் செய்த யோகா மாஸ்டர்! உல்லாசத்துக்காக கணவனை கொன்ற 2வது மனைவி!சிக்கியது எப்படி?
நீண்ட நேரமாக கதவு தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த ராஜ்குமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது ஹேம்நாத், கலைவாணியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை கண்டு கணவர் அதிர்ச்சியடைந்தார். இதனால் மனமுடைந்த ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு ஆற்காடு மருத்துவமனையில் ராஜ்குமார் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.