Published : Dec 07, 2023, 07:11 AM ISTUpdated : Dec 07, 2023, 07:42 PM IST

Tamil News Live Updates: மிக்ஜாம் புயல்.. தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு

சுருக்கம்

மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்புக்காக தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.5,060 கோடி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில் முதற்கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Tamil News Live Updates: மிக்ஜாம் புயல்.. தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு

07:42 PM (IST) Dec 07

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீன நிமோனியா வைரஸ் பாதிப்பு? மத்திய அரசு மறுப்பு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீன நிமோனியா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது

 

06:34 PM (IST) Dec 07

மரியாதையும் இல்லை; சரியான ஊதியமும் இல்லை: மரணத்தின் பிடியில் கேங்மேன்கள் - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

மின்சார துறையில் பணியாற்றும் கேங்மேன்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடு

 

05:39 PM (IST) Dec 07

இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்; விரைவில் தமிழகம் வரும் மத்திய குழு - முதல்வர் ஸ்டாலின் தகவல்!

வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி  வருவதாகவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு விரைவில் தமிழகம் வரவுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

05:10 PM (IST) Dec 07

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது

 

04:56 PM (IST) Dec 07

தமிழ்நாடு மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்: ராஜ்நாத் சிங் உறுதி!

தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்

 

04:11 PM (IST) Dec 07

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடிக்கு பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் பாராட்டு!

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்காக பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

 

03:41 PM (IST) Dec 07

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கை நிராகரிப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது

 

03:20 PM (IST) Dec 07

மக்களவையில் மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி. செந்தில்குமார்

திமுக எம்.பி., செந்தில்குமார் தனது பேச்சுக்கு மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார்

 

02:38 PM (IST) Dec 07

புயலுக்கு பின்னும் திரும்பாத அமைதி... வெள்ளத்தில் சிக்கிய சென்னையின் Exclusive கள நிலவரத்துடன் ஏசியாநெட் தமிழ்

சென்னையில் வெள்ளத்தால் சிக்கிய பகுதிகளில் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து சென்னைவாசிகள் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த Exclusive பேட்டியை பார்க்கலாம்.

02:35 PM (IST) Dec 07

தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு!

தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வவராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுள்ளார்

 

02:03 PM (IST) Dec 07

மிக்ஜாம் புயல்: முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

மிக்ஜாம் புயல் பாதிப்பு சேதங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்

 

02:03 PM (IST) Dec 07

மூன்று மாநிலங்களில் முதல்வர்களை அறிவிப்பதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி!

மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்வர்களை அறிவிக்காத பாஜகவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது

 

01:06 PM (IST) Dec 07

Puzhal Lake: மக்கள் யாரும் பதற்றம் அடைய தேவையில்லை! சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது.. தமிழக அரசு தகவல்!

சென்னை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும், மண் அரிப்பு ஏற்பட்ட சாலை மட்டப்படுத்தப்பட்டு வருகிறது என தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:58 PM (IST) Dec 07

மிக்ஜாம் புயல்.. தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்புக்காக தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.5,060 கோடி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில் முதற்கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

12:36 PM (IST) Dec 07

சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன சொருகீருவேன்... அர்ச்சனாவிடம் எகிறிய நிக்சன் - பரபரப்பான பிக்பாஸ் வீடு

வினுஷா பற்றி பேசியதால் கடுப்பான நிக்சன், அர்ச்சனாவை தரக்குறைவாக பேசி அவருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பானது.

12:09 PM (IST) Dec 07

புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

11:35 AM (IST) Dec 07

Puzhal Lake: புழல் ஏரியின் கரை உடையும் அபாயம்.. பீதியில் பொதுமக்கள்..!

தொடர் கனமழை காரணமாக புழல் ஏரி நிரம்பி வழிவதால் அதன் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

11:28 AM (IST) Dec 07

ரியல் ஹீரோவாக மாறிய பிக்பாஸ் தர்ஷன்... நாடு படக்குழுவுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவிய வீடியோ இதோ

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு வழங்கி உள்ள நாடு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

11:04 AM (IST) Dec 07

பாஜகவை விட அதிக ஓட்டு வாங்கியும் காங்கிரஸ் தோற்றது எப்படி? புள்ளி விவரத்துடன் வெளியிட்ட கே.எஸ்.அழகிரி!

 5 மாநில தேர்தல்களில் மொத்தமாக பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளை பெற்றும் தோல்வியடைந்து இருப்பதை எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

09:40 AM (IST) Dec 07

சென்னை வெள்ளம்: களத்தில் இறங்கிய விஜய்; கப்சிப்னு ஆன அஜித்..! AKவின் செயலால் கடுப்பாகி பிரபலம் தந்த நச் பதிலடி

நடிகர் அஜித் வெள்ள பாதிப்பில் சிக்கிய நடிகர்களுக்கு உதவிவிட்டு அவரின் ரசிகர்களை கண்டுகொள்ளாததை நடிகர் போஸ் வெங்கட் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

09:23 AM (IST) Dec 07

மழை வெள்ள பாதிப்பை இன்று ஆய்வு செய்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மழை வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார். அவருடன் ம்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உடன் செல்ல உள்ளனர். 

09:18 AM (IST) Dec 07

சென்னையை மீண்டும் ஒரு புயல் தாக்கப்போகுவதா? அலறும் பொதுமக்கள்! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவது என்ன?

மீண்டும் ஒரு புயல் அடுத்த வாரம் சென்னையை தாக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். 

09:18 AM (IST) Dec 07

புறநகர் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்

 சென்னையில் இன்றுமுதல் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

08:58 AM (IST) Dec 07

இப்பகூட பிசினஸுக்கு தான் முக்கியத்துவமா? வெள்ள நிவாரண உதவி வழங்கி சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!

சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கிய நடிகை நயன்தாராவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

08:35 AM (IST) Dec 07

சென்னையில் கடும் பனிமூட்டம்.. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

08:07 AM (IST) Dec 07

அமைச்சருடன் ஆய்வுக்கு சென்றபோது வழுக்கி விழுந்த திமுக எம்எல்ஏவின் கால் முறிவு..!

சென்னை அண்ணா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்வுடன் சென்ற போது தவறி விழுந்ததில் திமுக எம்எல்ஏவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. 

07:16 AM (IST) Dec 07

பகல் கொள்ளை.. ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.150.. தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு.. சசிகலா விளாசல்..!

புயல் மழையால் மக்களை காப்பாற்றவேண்டிய நேரத்தில் அவர்களிடமிருந்தே பகல் கொள்ளை நடப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். 

07:16 AM (IST) Dec 07

TNEB Bill: மின்கட்டணம் செலுத்தவில்லையா? கவலை வேண்டாம்.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்..!

மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 


More Trending News