Asianet News TamilAsianet News Tamil

சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன சொருகீருவேன்... அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன் - ரெட் கார்டு கொடுப்பாரா கமல்?

வினுஷா பற்றி பேசியதால் கடுப்பான நிக்சன், அர்ச்சனாவை தரக்குறைவாக பேசி அவருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் பிக்பாஸ் வீடே பரபரப்பானது.

vinusha matter sparks again VJ Archana and Nixen fight in BiggBoss house gan
Author
First Published Dec 7, 2023, 12:32 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று வினுஷாவை நிக்சன் உருவகேலி செய்த விஷயம். வினுஷா என்னுடைய டைப் இல்ல, அவரிடம் அதுக்கேத்த இது, இதுக்கேத்த அது இல்ல என அவரின் உடல் பாகங்களை சுட்டிக்காட்டி அவர் ஐஷுவிடம் பேசியது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. இந்த விஷயத்தை வினுஷா எலிமினேட் ஆன பின்னர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார் பிக்பாஸ்.

அப்போது நிக்சன், வினுஷா பற்றி பேசியதை டிவியில் ஒளிபரப்பியதும் போட்டியாளர்கள் முகம் சுளித்தனர். பின்னர் அது தான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை என சப்பைக்கட்டு கட்டிவிட்டு இதை யாரும் பெரிதாக்க வேண்டாம் என சொல்லியதோடு, இதுகுறித்து தான் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டதாக பொய் சொல்லி எஸ்கேப் ஆனார் நிக்சன். இதையடுத்து வந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் வினுஷா விஷயத்தில் நிக்சன் பொய் சொன்னதை போட்டுடைத்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறிப்பாக அனன்யா நிக்சனிடம் பேசும்போது, ஒரு அக்கா கிட்ட இப்படி தான் பேசுவிடா என கேட்க, உடனே தான் பேசியது தவறு தான் அதற்காக வெளியே சென்றதும் வினுஷா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என கூறினார். இதனால் அந்த பிரச்சனை தனிந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் கிளப்பி விட்டுள்ளார் அர்ச்சனா. நேற்றைய கல்லூரி டாஸ்க்கின் போது நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் இன்றும் தொடர்ந்த நிலையில், நீ எதுக்கும் ஃபிட் ஆக மாட்ட என அர்ச்சனாவிடம் நிக்சன் சொல்ல, இதற்கு அர்ச்சனா, ஒரு பொண்ண பத்தி தப்பு தப்பா பேசுன, வெளிலயே வினுஷா மேட்டர் எனக்கு தெரியும் என சொன்னதும், திரும்ப திரும்ப அதை சொல்லிக்கிட்டே இருக்காதீங்க என நிக்சன் சவுண்டு கொடுக்க, கத்தாத என அர்ச்சனா ரிப்ளை செய்தார். உடனே நிக்சனுக்கு மண்டை சூடாகி, நீ சொல்லாத மூடு, த்தூ நீயெல்லாம் பொண்ணா, வெளிய எந்திரிச்சு ஓடு என கண்டபடி பேசினார். 

வைல்டு கார்டுல எப்படி வந்தியோ அப்படியே வெளிய ஓடு என நிக்சன் பேச, துள்ளாத ஓவரா என அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார். பின்னர் கோபம் தலைக்கேறிய நிக்சன், பொண்ணா இது, சும்மா உப்மா சாப்பிட வந்துட்டா, நீ அழுகுறனு அமைதியா இருந்தா உனக்கு பயந்து போறாங்கனு நினைச்சியா, நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ 3 நாளைக்கு உட்கார்ந்து அழுவ. கருமம், அது மூஞ்சிய பாரு, சும்மா வினுஷா வினுஷா வினுஷானு சொன்ன சொருகீருவேன் என ரெளடி போல் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ரியல் ஹீரோவாக மாறிய பிக்பாஸ் தர்ஷன்... நாடு படக்குழுவுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவிய வீடியோ இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios