பாஜகவை விட அதிக ஓட்டு வாங்கியும் காங்கிரஸ் தோற்றது எப்படி? புள்ளி விவரத்துடன் வெளியிட்ட கே.எஸ்.அழகிரி!

மாறாக, தேர்தல் கணக்குகளை சரியாக கையாள தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய வெற்றியை தான் பா.ஜ.க. பெற்றிருக்கிறது. எனவே, மக்கள் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற கருத்து மிக மிக தவறானது.

How Congress lost despite getting more votes? ks alagiri tvk

 5 மாநில தேர்தல்களில் மொத்தமாக பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளை பெற்றும் தோல்வியடைந்து இருப்பதை எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், பாஜகவை விட அதிக வாக்குகளை பெற்றும் தோல்வியடைந்து இருப்பதை எச்சரிக்கையாக எதிர்கொள்ள வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

How Congress lost despite getting more votes? ks alagiri tvk

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் 4.81 கோடி வாக்குகள் பெற்ற பா.ஜ.க. 342 இடங்களையும், 4.92 கோடி வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 235 இடங்களையும் பெற்றுள்ளன. பத்தரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்ற காங்கிரஸை போல சற்றேறக்குறைய ஒன்றரை மடங்கு சட்டமன்ற இடங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது. இது தான் இன்றைய தேர்தல் முறையில் வெற்றி தோல்விகள் அமைகின்றன. 

How Congress lost despite getting more votes? ks alagiri tvk

இதில் உண்மை நிலை என்னவென்றால் இன்றைய தேர்தல் முறையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. மாறாக, தேர்தல் கணக்குகளை சரியாக கையாள தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய வெற்றியை தான் பா.ஜ.க. பெற்றிருக்கிறது. எனவே, மக்கள் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற கருத்து மிக மிக தவறானது. ஆனாலும் இது தோல்வியாக இல்லையென்றாலும் முடிவுகளை எச்சரிக்கையோடு காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டும். கீழே உள்ள அட்டவணை காங்கிரஸ் - பா.ஜ.க.வின் பலத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது.

அதன்படி மிசோரம் மாநிலத்தில் 1,46,113 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது. வெறும் 35,524 வாக்குகளை பெற்ற பாஜக 2 தொகுதிகளில் வென்று இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 66,02,586 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. சற்று அதிகமாக 72,34,968 வாக்குகளை பெற்ற பாஜக 54 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்து உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 1,75,71,582 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 66 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. 2,11,16,197 வாக்குகளை பெற்ற பாஜக 163 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்து இருக்கிறது.

How Congress lost despite getting more votes? ks alagiri tvk

ராஜஸ்தான் மாநிலத்தில் 1,56,67,947 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 69 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. 1,65,24,787 வாக்குகளை பெற்ற பாஜக 115 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்து உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 92,35,792 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. 32,57,511 வாக்குகளை பெற்ற பாஜக 8 தொகுதிகளில் வென்று இருக்கிறது. மொத்தமாக 5 மாநிலங்களிலும் 4,92,24,020 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 235 இடங்களில் வெற்றிபெற்று ஒரு மாநிலத்தில் மட்டுமே ஆட்சியை பிடித்து உள்ளது. அதை விட குறைவாக 4,81,68,987 வாக்குகளை பெற்ற பாஜக 342 தொகுதிகளில் வென்று 3 மாநிலங்களில் ஆட்சியை பிடித்து உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios